டீன் ஏஜ் பருவம் பத்தி எழுத அழைப்பு விட்ருக்காங்க .. விசில் அடிச்சி கூப்பிட்டவன் வினோத்கெளதம்..
என்னோட டீன் ஏஜ் பத்தி சொல்லனும்னா..80% இனம் புரியாத காம உணர்வு.. 15% ஜாலி லைப்.. 5 % படிப்பு.. இதான் நான் நானா இருந்தது.. (பலருக்கும் இப்படி தான்னு நினைக்கிறன்.. ஆனா ஏன் சொல்ல மாட்றாங்கன்னு தெரியல ..)
13 வயசு..
சயின்ஸ் புக்ல இருக்குற பூச்சிகளின் இனபெருக்க முறையை படிச்சாலே ஒரு மாதிரி தான்.. பொண்ணுங்க பார்த்தாலே ஒரு கிளுகிளுப்பு.. பேசிட்டா காத்துல பறக்குற கதை தான்.. ( அந்த பேச்சும் வெறும் புக் வாங்குறது,, பேனா குடுக்குறதுன்னு .. சப்ப மட்டர் தான்.)
14 வயசு
சில சமயம் டிராயரும் சில சமயம் பாண்டும் அணிந்த காலம் அது.. என்னத்த சொல்ல...? அதுவரை உலகிலேயே மிக வசதியான உடையாக இருந்த டிராயர் அவ்வப்போது சங்கடமாக உணர வைத்த காலம் இது..
15 வயசு
அரும்பு மீசையும் உடலில் ஆங்காங்கே ஏற்பட்ட மாற்றங்களும் தனி திமிரை வர வைத்த காலம்.. அதுவரை யாரையும் அக்கா,அண்ணி , ஆண்டி என்று பழகிய எனக்கு.. எல்லோரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பித்த காலம்..
16 வயசு
பிசிக்ஸ் மேம் போர்டில் ஒரு கையை உயர்த்தி பிடித்து கொண்டு நடத்திய பாடத்தை பற்றி " is it clear students?" என்று கேட்க போர்டில் இருப்பதை "மட்டும் " பார்க்காமல் "very clear " மேம் என்று ஜொள்ளுடன் பதில் உரைத்த காலம்..
17 வயசு
டேய் மச்சி சீனிவாசல " love cover girl" ன்னு ஒரு படம் வந்து இருக்குடா ஆரம்பம் முதல் கடைசி வரை டிரஸ் இல்லையாம் அப்படீயே காட்டுராங்கலாம் .. மதியம் போலாமா ? .-நான்
டேய் மதியம் ஆட்டோமொபைல் லேப் இருக்குடா.. நமக்கு lab incharge யாருன்னு தெரியும்ல g.v சார்.. அப்புறம் அடுத்த வாரம் கஞ்சி காச்சிடுவாரு -பார்த்திபன்
டேய் நான் விசாரிச்சிட்டேன் அவரு மதியம் வரலயம் அவரும் senior instructor -ரும் எதோ முக்கியமான வேலையா வெளில போய் இருக்காங்களாம் .. இன்னைக்கு s.p தான் incharge.. பாரு கார்த்தி கூட பார்த்தே ஆகணும்னு அடம் புடிக்கிறான். விட்டா அழுதுடுவான் போல இருக்கு.- நான்
ஆமா மச்சான் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா.. வாடா போலாம்.. ப்ளீஸ்.. - கார்த்தி
சரி வாங்க போலாம் - பார்த்திபன்
படம் போட ஆரம்பித்த 10 வது நிமிடம் கார்த்தி மெதுவாக.. மச்சான் அங்க பாரு g.v -யும் senior instructor -ரும் உக்கார்ந்து இருக்காங்க.. மச்சான் அவங்க கண்ணுல மாட்டுனா அவ்ளோ தான்.. கிளாஸ் போகாததுக்கும் இங்க அவனுங்கள பார்த்ததுக்கும் சேர்த்து ரிவெட் வைப்பாங்க.. போய்டலாம் என்று சொல்ல.. சத்தம் காட்டாமல் வெளியில் ஓடி வந்த காலம்..
18 வயசு.. & 19 வயசு..
அட படிக்கிற காலம்ங்க.. அதான் சொன்னேன்ல 5 % படிப்புன்னு..
தொடர விரும்புவோர் தொடரலாம்.. நான் அழைப்பது கண்ணா மற்றும் பப்பு..( ஆமா பப்பு உனக்கு டீன் ஏஜ் முடிஞ்சிடுச்சா?)
15 comments:
அட... என்னைக் கூப்பிடாமயே.. நானும் டீனேஜ் மேட்டரைத்தான் எழுதியிருக்கேன்! :) :)
அதெப்படி.. வினோத் பதிவு போட்ட கொஞ்ச நேரத்துல.. உங்க பதிவு வந்துச்சி???
சுப்பர் . வயசு கோலாரு ...என் வயசு பருவம் னினைவில் வருகிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
உங்கள எதுக்கு இந்த வயசான காலத்துல தொடர் பதிவுக்கு எல்லாம் கூப்பிட்டு தொந்தரவு கொடுக்கணும்னு விட்டேன் பாலா.. :))
ரொம்ப நாள் ஆச்சி பதிவு எழுதி.. என்ன எழுதி திரும்ப ஆரம்பிக்கலாம்னு ஒன்னும் தெரியல.. வினோத் வேற இந்த பதிவுக்கு கூபிட்டான் .. சரின்னு டபுள் விசில் கொடுத்து ஏறிட்டேன்..
நன்றி மதுரை சரவணன் தங்கள் வருகைக்கும்.. வாழ்த்துகளுக்கும் ..
அடப்பாவிகளா...உங்க போதைக்கு நான் ஊறுகாயா...
சரி..நானெல்லாம் பேசிக்கலி ரொம்ப சோம்பேறி...அதனால கூடியய..சீக்கிரம் போட்டுருதேன்
போட்டோல்ல ஓரு மார்க்கமாதான் இருக்கே...
@ கண்ணா..
போடு.. போடு.. சீக்கிரம் போடு..
ஒரு மார்கமான்னா?
டேய் டபுள் மீனிங்க்ல பேசாத அப்புறம் காக்கா தலைல கொத்திடும்..
இவ்வளவு வேகமா எழுதி தள்ளி இருக்க..
சூப்பர்..ரொம்ப ரசித்தேன்..
நான் சில விஷயங்களை வெளிப்படையாக எழுதாமல் போனதற்கு காரணம் தெரியும் என்று நினைக்கிறேன்..
இல்ல என் பதிவும் xx மாதிரி தான் இருந்திருக்கும்..:)
\\பப்பு..( ஆமா பப்பு உனக்கு டீன் ஏஜ் முடிஞ்சிடுச்சா?) \\
அப்படியா..? சொல்லவேயில்ல..
உங்கள எதுக்கு இந்த வயசான காலத்துல தொடர் பதிவுக்கு எல்லாம் கூப்பிட்டு தொந்தரவு கொடுக்கணும்னு விட்டேன் பாலா.. :))//
இந்த ஒன்னுத்துக்கே உங்களுக்கு கள்ள ஓட்டுகூட பொடலாம் கிஷோர்..:))
--
ஸூப்பர்..:)
@வினோத் கெளதம்
ஹீ.. ஹீ.. நன்றி..
@ ராஜு
சொன்னா மட்டும் விளங்கிடும்.. நன்றி..
@ ஷங்கர்
ஹா.. ஹா.. பாலாவ சொன்னா உங்களுக்கு இப்படி ஒரு சந்தோசமா? விட்டா என்னையும் பிரபல பதிவர் ஆக்கிடுவிங்க போல இருக்கு.. :)
ஆங்.. அப்புறம் அந்த கள்ள ஓட்டு... அதை மறந்துடாதிங்க .. :)
நன்றி..
கடமைய செஞ்சுட்டோமா?
கடமையை செய்வதில் நீ ஒரு கட்டெறும்பு என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாயடா பப்பு..
Post a Comment