Thursday, March 11, 2010

கட்டிங் வித் கிஷோர் - 4

சில வருடங்களுக்கு முன்பு.. என்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி சட்டிஸ்கர் மாநிலம் பச்சேலி என்ற ஊரில் இருந்தார்கள். விடுமுறைக்காக அங்கே சென்று இருந்தேன் .மாமாவிற்கு அடிக்கடி லீவ் போட முடியாத காரணத்தால் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு நாள் 100 கிமீ தொலைவில் இருக்கும் சித்திரகோட் பால்ஸ் போவதென்று முடிவு செய்து.. கிளம்பினோம்..நான்,அக்கா எனது நண்பர்கள் இருவர்..
அழகு கொஞ்சும் மலை காடுகளையும் நீர்விழ்சிகளையும் பற்றி இன்னொரு பதிவில் படங்களுடன் சொல்கிறேன் ..
நாங்கள் போன பாதை மலைவாழ் மக்கள் வசிக்கும் காட்டு பகுதி.. சொல்லி வைத்தார் போல் இரண்டு மலைகளை தாண்டியதும் வண்டி மக்கர் செய்து விட.. மலை சரிவில் தூரத்தில் மலைவாழ் மக்களின் குடிஇருப்புகள் தெரிய.. ரேடியேடற்கு தண்ணி எடுப்பதற்காக நானும் என் நண்பர்களில் ஒருவனும் மட்டும் கேன் எடுத்துக்கொண்டு மலை சரிவில் இருந்த மலைவாழ் மக்களின் ஊருக்குள் சென்றோம் .

போகும் வழியில் நமது அரசு அந்த மலைகளிலும் சாலை வசதி தண்ணீர் வசதி செய்து இருப்பதை பற்றி பெருமையுடன் பேசி கொண்டு சென்றோம்.. ஆனால் அது எந்த ஜென்மத்திலும் ஏழைமக்களுக்கு சென்று அடையாத வசதிகள் தான் என்று ஊருக்குள் நுழைந்ததும் புரிந்தது. யாரும் இல்லாத பகுதியில் சாலை வசதிகளும் மின்சார வசதிகளும் செய்து வைத்திருக்கும் அரசு மக்கள் வாழும் பகுதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஆச்சர்யம் (அலட்சியம் ).

கதைகளில் சினிமாக்களில் பார்ப்பதை போல யாரும் எங்களை சுற்றி வளைக்க வில்லை.. மாறாக குறுகிய தலைகளும் சற்றே உப்பிய வையறுமாய் நீண்ட காது மடல்களில் பெரிய வளையங்களுடன் வெள்ளந்தி சிரிப்புடன் இருந்த மக்கள் புதியதாக எங்களை கண்டதும் ஓடி ஒளிந்தது தான் ஆச்சர்யம் . இன்றும் மேலாடை அணியாத பெண்கள்,வாடி வதங்கிய குழந்தைகள் வறுமையின் வறுமையின் அத்தனை நிலைகளையும் காண முடிந்தது.

அவர்களிடம் தூரத்தில் நின்ற வண்டியை காட்டி வாட்டர் கேனையும் காட்டி தண்ணீர் வேண்டும் என்றோம். எங்களை மாறி மாறி பார்த்தவர்கள் நம்பிக்கை வந்தவர்களாய் தண்ணீர் பிடித்து கொடுத்தார்கள்.

எங்களுக்கும் சற்று பயம் நீங்கி அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். சந்தோசத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதாலோ என்னவோ அவர்களின் நிலையை அவர்களின் புரியாத பாஷைகளிலும் சைகைகளிலும் விளக்க புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை. வாழ்வோ சாவோ எல்லாம் இவர்களுக்குள்ளே பார்த்து கொள்கிறார்கள் . காட்டில் கிடைக்கும் பழங்களை மலைக்கு கீழே இருக்கும் ஊர்களுக்கு சென்று விற்று அந்த பணத்தில் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நேரம் ஆகி விட்ட படியால் அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.. வரும் போது அவர்களிடம் ஒரு கூடை நிறைய நாவல் மற்றும் பலா பழம் வாங்கினோம் அதற்கு அவர்கள் பெற்று கொண்ட தொகை வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டாயபடுத்தி கொடுத்ததும் அதிக பணம் வாங்க மறுத்து விட்டார்கள்..
அந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளி வந்தோம்.. மீண்டும் காதுகளில் அந்த குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பு சத்தம்..
-----------------------------------------------------------------

நித்தியானந்தா ஜி

சாமியார் நடிகையுடன் படுக்கை அறை காட்சிகள் என்று பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் விளம்பரம் செய்து தங்கள் ரேட்டிங்கை உயர்த்தி கொண்டனர்.

உலகையே தனது பேச்சால் மயக்கிய ஒருவன் எதில் கோட்டை விட்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
யாரை குறை சொல்வது?
40 வயது நிரம்பாத ஒருவனை சாமி என்று பின் தொடர்ந்து சென்றவர்களையா ?
அவனை பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியட்ட பத்திரிக்கைகளையா ?
பணமும் புகழும் மரியாதையும் இந்த சமூகத்தில் கிடைத்த பின்பும் அடங்காமல் ஆட்டம் ஆடியவணையா?

யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது.. அரங்கேறிய அசிங்கங்களுக்கு மூவருமே காரணம்.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவன் பேரில் நில அபகரிப்பு மோசடி செய்தி ஒரு நாளிதழில் வந்த போது கண்டு கொள்ளாமல் இப்பொது மட்டும் இதை செய்தியாக போட்டு தங்களை மக்கள் முன் நியாயஸ்தர்களாக கட்டி கொள்ளும் மீடியாக்கள் வாழ்க..

ஒருவேளை புகழ் பெற்ற நடிகையுடன் இல்லாமல் வேறு பெண்களுடன் இருந்த காட்சிகளை பத்திரிகைகளும் மீடியகளும் இவ்வளவு பிரபலபடுத்தி இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ரஞ்சிதாவை புகழ் பெற்ற நடிகை என்ற ஒரே காரணத்திற்காக முகத்தை கூட மறைக்காமல் முன்னிறுத்தி அந்தரங்க ஆபாசங்களை குடும்பங்களில் சிறு பிள்ளைகள் கூட பார்பார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் வீட்டின் நடு கூடம் வரை கொண்டுவந்த மீடியாக்கள் காஞ்சிபுரம் பூசாரியுடன் கருவறையில் விளையாடிய குடும்ப "குத்து " விளக்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ?

நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்.. இப்படி ஓடி ஒளியாம தைரியமா வெளில வந்து மக்கள் கிட்ட செருப்படியோ இல்ல அழுகுன முட்டை வீச்சோ வாங்கிட்டு பாதுகாப்பா ஜெயிலுக்கு போய்டு... நீ ஜெயிலுக்கு போய்டா இந்த மானங்கெட்ட மக்களும் சீக்கிரம் உன்ன மறந்துட்டு வேற எவனாச்சும் புதுசா வருவான் அவன் பின்னாடி போய்டுவானுங்க . நீ அங்க போய் உன்னோட சூப்பர் சீனியர் பிரேம் (பிரேமானந்தா) இருக்காருல்ல அவர பாலோவ் பண்ணி நீயும் ஜெயிலுக்கு பக்கத்துலயே ஒரு ஆசிரமம் வச்சி போலீஸ் பாதுகாப்போட பிசினஸ் பண்ணு.. எவன் என்ன கேப்பானு அப்போ பார்த்துடுவோம்..

எதோ நானும் ஒரு‘வுமனைஸர்’ [பெண்களை நேசிப்பவன் - நன்றி : திரு.சாரு பின் நவீனத்துவ எழுத்தாளர் (என்று ஆள் வைத்து சொல்லிகொள்பவர்) :) ] என்ற முறைல சொல்றேன்.. வீணா பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடாத..
--------------------------------------------------------------------
ரத்த கண்ணீர்.. இந்த படத்தின் காட்சிகளை அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் ஆனால் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு நேற்று அமைந்தது.

M.R.R அந்த காலத்துலயே ஸ்டைல், மானரிசம், டயலாக் டெலிவரி, நக்கல் என்று எல்லாத்துலயும் புகுந்து விளையாடி இருக்கிறார். அம்மாவை கவுன் போட சொல்வதும், மாமாவை வெளியே போக சொல்வதும், இந்திய அரசை கிண்டல் பண்ணுவதுமாய் மனுஷன் பின்னி இருக்கிறார்.
அதிலும் நோய் வந்த பின்பும் அவரின் குசும்பு குறையாத பேச்சை ரொம்பவே ரசிக்க வைத்தார். M.N ராஜம் அவர்களும் தைரியமாக யாரும் நடிக்க தயங்கும் வாய்ப்பை பெற்று அசத்தி இருக்கிறார்..

டேய் நித்தி..உன் படத்த ஊரே பாக்குறது இருக்கட்டும் நீ முதல்ல இந்த படத்த பாரு. you must see this movie..

---------------------------------------
மீண்டும் சநதிப்போம் ..

14 comments:

சீமான்கனி said...

//இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை.//

உண்மைதான்...மலைவாழ் மக்களின் நிலைமையை பகிர்வு அருமை...

Priya said...

//வரும் போது அவர்களிடம் ஒரு கூடை நிறைய நாவல் மற்றும் பலா பழம் வாங்கினோம் அதற்கு அவர்கள் பெற்று கொண்ட தொகை வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டாயபடுத்தி கொடுத்ததும் அதிக பணம் வாங்க மறுத்து விட்டார்கள்..//....இப்படியும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!


//நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்//....உங்க ப‌ர்சனல் அட்வைஸ் நல்லாயிருக்கே:‍)

பாலா said...

அப்பப்ப எழுதினாதானே... எங்களுக்கும் டச் விடாம இருக்கும்?? :)

====

பாருங்க.. நித்தி விடியோவுல.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயம் தெரியுது. ;)

===

ஓட்டுரிமைங்கறது, ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசியலமைப்பு சட்டத்திலேயே இயற்கையா வர்றது. இதை எப்படி அரசாங்கம் ஓட்டுரிமை தரலைன்னு சொல்லுறீங்க?

Prabhu said...

நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்.. இப்படி ஓடி ஒளியாம தைரியமா வெளில வந்து மக்கள் கிட்ட செருப்படியோ இல்ல அழுகுன முட்டை வீச்சோ வாங்கிட்டு பாதுகாப்பா ஜெயிலுக்கு போய்டு... //

என்ன பாலா இது, இவரு பாட்டுக்கு மனுஷனோட தனிபட்ட உரிமையில் கை வைக்கிறாரு. நீங்க வேடிக்கை பாக்குறீங்க.ஐயா, அந்த செக்ஸுக்காக எல்லாம் உள்ள போட சட்டம் இல்ல. வேணும்னா யாரயாவது ரேப் பண்ணிட்டாருன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளட்டும்.. ஒரு சாமியாருக்கு ஜல்சா பண்ண உரிமை இல்லையா?

Unknown said...

மலை வாழ் மக்களைப் பற்றிய பகிர்வு அருமை.

Raju said...

மலைவாழ்மக்கள் :-((

கண்ணா.. said...

//இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை. //

கொடுமைதான்


நித்திய பத்தி மேட்டர் போட்டுட்டு “கட்டிங் வித் கிஷோருன்னு டைட்டில் வச்சுருக்கயே... பொழைக்கத் தெரியாத புள்ளயா இருக்கியே......

பாலா said...

//என்ன பாலா இது, இவரு பாட்டுக்கு மனுஷனோட தனிபட்ட உரிமையில் கை வைக்கிறாரு. நீங்க வேடிக்கை பாக்குறீங்க.//

அதுவும் சரிதான்.

கிஷோர்... யாருங்க செக்ஸ் வைச்சிகிட்டது தப்புன்னு சொல்லுறது. இந்தியாவில் ப்ராட்டிட்யூசனே சட்டப்படி குற்றமில்லை.

நம்மாளு.. அதைக்கூட செய்யலை. என் கஷ்டமெல்லாம்.. ஒரு நல்ல வீடியோ கிடைக்கலையேன்னுதான்.

kishore said...

@ seemangani
நன்றி..:)
Delete
@ priya
ஹா ஹா.. நன்றி பிரியா.. அட்வைஸ் சொன்னாலும் யாரும் கேக்குற நிலைமைல இல்ல
Delete
@ ஹாலி பாலி

முடிஞ்ச அளவுக்கு உங்கள டார்ச்சர் பண்ண முயற்சி பண்றேன்..

நித்தி வீடியோல ஒன்னுமே தெரியல..

ஓட்டுரிமை எல்லோருக்கும் கிடைக்கணும் தான்.. என்ன பண்றது அவங்க மக்கல் தொகை மிக கம்மி.. ஒரு வேளை அதுவ்கும் காரணமாக இருக்கலாம்.. இல்ல அவங்களும் ஒரு ஜாதி சங்கம் ஆரம்பிச்சாங்கன்ன ஜாதி ஒட்டு வாங்க அவங்களுக்கு ஓட்டுரிமை குடுப்பாங்கன்னு நினைக்கிறேன்..

@ பப்பு
உரிமைய யாரும் குறை சொல்லல.. ஆனா பாக்குறவங்கள கேனையன் ஆக்குறது தப்பு தான.. நாங்களும் எவ்ளோ நேரம் தான் எதாவது காட்டுவாங்கன்னு உக்கார்ந்து இருக்குறது?

@ முகிலன்
நன்றி :)

@ ராஜு

நன்றி..

@ கண்ணா

நன்றி மச்சி.,,
என்ன பண்றது மச்சி... சாமியார் கட்டிய வீடு ன்னு தலைப்பு வைக்கலாம்னு நினச்சேன் ஆனா நீ சிமெண்ட் கல்லு ஜல்லி மண்ணு கட்டடம் ன்னு ஒரு பேர கூட விட்டு வைக்கல .. இனிமே எதாவது தேடனும்..

@ ஹாலி பாலி

நானும் செக்ஸ் வசிக்கிறது தப்புன்னு சொல்லலங்க.. ஒன்னுமே காட்டாம வீடியோ எடுக்குறதும்.. ரஞ்சிதா மாதிரி ஒரு செம கட்டை பக்கத்துல இருக்கும் போது எழவு வீட்ல உக்கார்ந்து இருக்குற மாதிரி உக்கார்ந்து இருக்குறதும்..
பார்த்துகிட்டு இருக்கும் போது லைட் ஆப் பண்றதும்.. சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு.. இதுக்கு அந்த நாய் ஜெயில்லுகே போய்டலாம்..

வினோத் கெளதம் said...

//ரஞ்சிதா மாதிரி ஒரு செம கட்டை பக்கத்துல இருக்கும் போது //

இதுல இருந்தே தெரியுது நித்தி மேல எதுக்கு கோபம்னு..சில பேரை எல்லாம் திருத்தவே முடியாது ..

மழைவாழ் மக்கள் பற்றி சொன்ன சரி..ஆனா அன்னிக்கு பார்த்த ’ஒரு காட்சியை’ பற்றி நீயும் ’வண்டிக்கேட் வினோத்தும்’ ரொம்பவே சிலாக்கித்து சொல்லுவிங்களே அதைபற்றி ஏன் ஒன்னும் சொல்லலை..

உமர் | Umar said...

//‘வுமனைஸர்’ [பெண்களை நேசிப்பவன் - நன்றி : திரு.சாரு பின் நவீனத்துவ எழுத்தாளர் (என்று ஆள் வைத்து சொல்லிகொள்பவர்) :) ] //

ஒரே வரியில் தமிழ் இலக்கிய உலகைப் புட்டு வைத்து விட்டீர்கள்!

kishore said...

@ வினோத்கெளதம்


என்ன காட்சி? நானும் அவனும் என்ன பேசுனோம்? என்ன சொன்னோம்? என்ன உளர்ற ? குடிச்சிறிகியா ? :(


@ கும்மி

நன்றி :)

பருப்பு (a) Phantom Mohan said...

அய்யா கிஷோர் அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

மணிஅரசன் said...

எந்த சாமியாரும் செய்யாததை இவர் செய்துவிடவில்லை, வரலாற்றை பாருங்கள் குறிப்பா விஸ்வமிதறரை பற்றி படிங்கள் , இதெல்லாம் ஜுஜ்ஜுபி