Tuesday, March 2, 2010

இது தான் காதலா?

அர்ச்சனா ரெஸ்டாராண்ட் ...போன மாதம் கல்யணம் ஆகி இருந்த வினோத்தும் நந்தினியும் வேறு உலகத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு அந்த ஹோட்டல்லின் கடைசி டேபிள்லில் உணவுடன் உணர்வையும் அசைபோட்டு கொண்டு இருந்தனர் . பேசும் போது எதேச்சையாக எதிர்புறம் பார்வையை செலுத்திய நந்தினிக்கு அதற்கு மேல் அவள் கணவன் வினோத்திடம் சகஜமாக பேசமுடிய வில்லை.. காரணம் எதிர் டேபிள்லில் "சிவா".. அவளின் முன்னால் காதலன்..

சிவாவின் விழிகளில் ஏளனம் .. என்ன இருந்தாலும் என் கூட ரெண்டு வருஷம் சுத்துணவ தான என்ற ஒரு அலட்சிய பார்வை.

அவளை பார்த்தபடியே பேரர் கொண்டு வந்த ஜூஸை பருகினான்.. ஜூஸ் இல் இருந்த சில்லிப்பு அவன் மனதில் இருந்த தீக்கு இரையாகி காணாமல் போய் கொண்டு இருந்தது..
எத்தன நாள் இதே மாதிரி என்கூட ஹோட்டல்ல சாப்பிட்டு இருப்பா? இன்னைக்கு அவன் புருஷன் கூட.. பத்தினி மாதிரி..
இவள் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லன்னு நினைச்சிட்டா போல இருக்கு..
பாருடி நான் சந்தோசமா இருக்கேன்.. இன்னைக்கு நான் அன்னைக்கு இருந்ததை விட அதிகம் சம்பாதிக்கிறேன் .. அன்னை நான் இருந்த நிலைமையை காரணம் காட்டி தான என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிகிட்ட? இப்போ நான் சந்தோசமா இருக்கேன்.. ஆனா நிம்மதியா இல்லை . நான் இன்னைக்கு இருக்குற நிலைமைய உங்கிட்ட சொல்லி உன்னை அழவச்சி பார்த்தாதான் எனக்கு நிம்மதி. அந்த சந்தர்ப்பதிற்காக தான் காத்துகிட்டு இருக்கேன்..

சிவா நினைத்தபடியே அவனுக்கு சந்தர்பம் அமைந்தது.. வினோத் எதையோ மறந்தவனாய் அவளிடம் சொல்லி விட்டு காருக்கு திரும்ப.. அவள் எழுந்து கை கழுவ சென்றாள்.. இது தான் சரியான் சந்தர்ப்பம் என்று எண்ணியவனாய் மின்னலாய் அவளை பின் தொடர்ந்தான்..

அந்த அறை கதவை திறந்ததும்.. அவன் எதிர்பார்க்காமல் அந்த குரல் கேட்டது..

எப்படி இருக்கீங்க சிவா?-நந்தினி

பேசினால் பயந்து ஓடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து வந்த கேள்வியால் இன்னும் கோபம் தலைகேறியது.. ..

ச்சே.. கொஞ்சம் கூட வெக்கபடாம பேசுற.. எத்தன நாள் என்கூட இதே மாதிரி சுத்தி இருப்ப.. என்று ஆரம்பித்தவன்.. மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் நெருப்பு துண்டங்களாக கொட்டினான்.

இதெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவளின் இதழ்களில் ஒரு சின்ன புன்சிரிப்பு.. விழிகளில் பரவசம்.. மற்றபடி அவளிடம் எந்த பதிலும் இல்லை..
இதை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் அதிகம் ஆகியது..

ச்சே.. என்ன ஜென்மம் நீ? இவ்ளோ பேசுறேன் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம சிரிக்கிற.. உன்னை போயா ரெண்டு வருஷம் உருகி உருகி காதலித்தேன்? ஒருத்தனுக்கு காதலியா துரோகம் பண்ணிட்டு இப்போ அடுத்தவனுக்கு மனைவியா அதையே செய்யறியே உனக்கு வெக்கமா இல்ல? தயவுசெஞ்சி உன் புருஷனுக்காது இனிமே உண்மையா இரு..

"இனி என் வாழ்நாள் முழுக்க நான் நினைச்சி கூட பார்க்க விரும்பாத ஒரே நபர் நீயா தான் இருக்க போற.." என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் கதவை வேகமாக திறந்து வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றவுடன். அந்த அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று.. மனதிற்குள் பேச தொடங்கினாள் ..
இல்ல சிவா.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணல.. நான் எப்படி சிவா எனக்கே துரோகம் பண்ணிக்க முடியும்?.
சிவா அன்னைக்கு நீங்க இருந்த நிலைமைல.. உங்க சொந்த வாழ்கையை பத்தி கவலைபடல.. என்னை கல்யாணம் செய்யணும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் உங்க மனசுல இருந்துச்சி.
எனக்காக நீங்க உங்களுக்கு வந்த வாழ்கைல உயர போகிற நல்ல சந்தர்பங்களை எல்லாம் உதறி தள்ள தயாரா இருந்திங்க..

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாழ்கை இருக்கு.. நிதர்சன வாழ்கை.. அதற்கு காதல் மட்டும் பத்தாது சிவா.. கல்யாணத்துக்கு பின்னாடி நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சினைகளை கூட என்னால தாங்கிக்க முடியாது சிவா.

நான் ரசித்து ரசித்து உருகி உருகி காதலித்த.. காதலை மட்டுமே எனக்கு தந்த என் சிவா முகம் திருப்பி போறத என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது..

என்னோட சிவா வாழ்நாள் முழுக்க நல்லா இருக்கனும்.. என்னோட சிவா வாழ்கைய கெடுக்குற எந்த விஷயத்தையும் எதிர்க்க நந்தினி தயங்கமாட்டா..
அதுக்காக இந்த நந்தினி எதுவானாலும் செய்வா..
அவளையே விட்டு கொடுக்கறத கூட..
இதற்கு இந்த உலகம் என்னை ஆயரம் பேர் சொல்லி அழைக்கலாம்.. எனக்கு கவலை இல்லை ..
என்னை பார்த்து "இது தான் காதலா?" என்று கேட்கலாம்.
ஆம்.. என்னை பொறுத்தவரை "இதுவும் காதல் தான்".

11 comments:

வினோத் கெளதம் said...

ஓஹோ..நந்தினி அதனால தான் பிரிந்தாளா..நல்ல கதை..நல்ல திருப்பம்..
கதாபாத்திரங்கள் தேர்வு மிக அருமை.

Unknown said...

1970ல வந்த தமிழ் சினிமா பாத்த மாதிரி இருக்கு.. :)

Paleo God said...

விதாவி பார்த்துட்டீங்களா?? :))

ப்ரியமுடன் வசந்த் said...

//முகிலன் said...
1970ல வந்த தமிழ் சினிமா பாத்த மாதிரி இருக்கு.. :)//

யோவ் ஓல்டுமேன்...

கிஷோர் நீ எழுது ராஸா ....நல்லாவே இருக்கு மச்சி...

என் நடை பாதையில்(ராம்) said...

ஆஹா! இப்படி யோசிச்ச உங்கள எப்படி பாராட்டறதுன்னே தெரியல கிஷோர்...

சீமான்கனி said...

நந்தினி பாவம் இல்லையா...
நல்ல இருக்கு ...வாழ்த்துகள்...

Prabhu said...

ஹானஸ்ட் கமெண்ட் வேணுமா? எல்லோரும் கமெண்டுல உங்கள ஓட்டுறாங்க... நான் ரகசியமா ஜிடாக்ல சொல்றேன்.

கண்ணா.. said...

//ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாழ்கை இருக்கு.. நிதர்சன வாழ்கை.. அதற்கு காதல் மட்டும் பத்தாது சிவா.. கல்யாணத்துக்கு பின்னாடி நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சினைகளை கூட என்னால தாங்கிக்க முடியாது சிவா.

நான் ரசித்து ரசித்து உருகி உருகி காதலித்த.. காதலை மட்டுமே எனக்கு தந்த என் சிவா முகம் திருப்பி போறத என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது..//

நல்லா சொல்லியிருக்க மச்சி..

ஆனா உண்மை காதல்ங்கறது...சின்ன சின்ன பிரச்சினைகளை மட்டுமல்ல பெரிய பெரிய பிரச்சினைகளையும் சேர்ந்து சமாளிக்கறதுதான்.

விமலரூபன் said...

அருமையாக இருக்கிற்து.அந்த பாதையினால் நடந்து வந்தவர்களுக்குதான் மன நிலை புரியும்.ஆனால் பிரிந்துதான் சாதனைகளை சந்திக்கலாம் என்றில்லை.சாதனைகளோடு சேர்ந்து சந்தோசப்பட காதலிதானே வேன்டும்.தொடர்ந்து இன்னும் எழுத வாழ்த்துகள்

விமலரூபன் said...
This comment has been removed by the author.
kishore said...

@ வினோத்கெளதம்
மச்சான்.. அடக்கம் அமரருள் உய்க்கும்

@ முகிலன்

2010 -ல ரீமேக்ன்னு வச்சிகோங்க :)

@ ஷங்கர்

யாருங்க அவரு ?

@ ப்ரியமுடன் வசந்த்

நீ சொன்னா சரி தான் மச்சி..

@ ராம்

கிரெடிட் கார்டு accepted

@ seemangani

பாவம் தான்.. என்ன பண்றது?

@ பப்பு

நீ என்ன நினைகிறன்னு எனக்கு தெரியும்டி.. அடங்கு .. :)

@ கண்ணா

உனக்கு தெரியுது ஆனா அவங்களுக்கு தெரியல பாரு..
நன்றி மச்சி

@ ruban-paakiyanathan

வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல ..