Saturday, March 20, 2010

நான் - நீ - தற்கொலை

ஹலோ எப்படி இருக்கீங்க?
பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..

ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.

ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..
ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..

அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..

என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..

நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..

அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.

அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.

இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழி ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...

இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..

ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்

இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.

6 comments:

வினோத் கெளதம் said...

நான் கூட உண்மையா இருக்குமோன்னு
ஆரம்பத்திலிருந்து சுவரசியமா படிச்சிட்டு வந்தேன்..கடைசியா..
ஆனா ரொம்ப சூப்பரு..:))

கண்ணா.. said...

//நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்//

க்கா...த்தூஊ.............

கண்ணா.. said...

முதல் பாரால நல்ல விஷயத்தை சொல்லிட்டு கடைசில.. குண்ட தூக்கி போடுறியே..

நல்லாரு மக்கா..............

சீமான்கனி said...

//இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..//


கட்டிங் போடலன்னு பார்த்ததும் எனக்கு தெரியும் இப்டிதான் போகும்னு...எப்பவும் கட்டிங்ல இருந்துட்டு புதுசா உலகத்த பார்த்தா அப்டிதான் ராசா...

kishore said...

அனைவருக்கும் நன்றி..

மணிஅரசன் said...

கொய்யால உன்ன வெட்ட போறேன் பாரேன்