Tuesday, June 7, 2011

UNKNOWN - திரை விமர்சனம்


ஒருவன் தன் அழகான மனைவியோடு 'பயோ டெக்னாலஜி' கான்பிரன்சில் கலந்து கொள்ள வெளிநாடு செல்கிறான். ஏர்போர்டில் இருந்து நேராக ஹோட்டல் சென்று இறங்குகிறார்கள். மனைவி ஹோட்டல் உள்ளே செல்ல இவன் எடுத்து வந்த பொருட்களை சரி பார்க்கும் போது ஒரு பெட்டியை மாத்திரம் ஏர்போர்டில் விட்டு விட்டு வந்தது தெரியவர மனைவியிடம் கூட சொல்ல நேரம் இல்லாமல் வேறு ஒரு டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் நோக்கி செல்கிறான்.

வழியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு டாக்ஸி ஆற்றில் விழுகிறது. விழும் பொழுது இவன் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு செல்கிறான். காருக்குள் இருந்த பெண் டாக்ஸி டிரைவர் இவனையும் காப்பாற்றி கரையில் கொண்டு வந்து சேர்க்கிறாள்.

நான்கு நாட்கள் கழித்து நினைவு திரும்புகையில், மனைவியை தனியே ஹோட்டலில் விட்டு வந்தது நினைவு வர.. பரிதவிப்போடு செல்கிறான்.

ஹோட்டல் ஊழியர்களிடம் தான் Dr.மார்டின் ஹாரிஸ் என்பதையும் தான் இங்கு ஒரு கான்ப்ரன்ஸ்ல் கலந்து கொள்ள வந்ததாகவும், தனக்கு விபத்து நேர்ந்ததையும், தன் மனைவி ஹோட்டல் உள்ளே இருப்பதையும் தான் அவளிடம் பேச வேண்டும் என்றும் சொல்கிறான். ஊழியர்கள் இவனிடம் அடையாள அட்டையை கேட்க தன்னிடம் ஒன்றும் இல்லை என் மனைவியுடன் பேசினால் உங்களுக்கு புரியும் எனவே என் மனைவியுடன் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டு அனுமதி பெறுகிறான்.

அவன் ஊழியர்களுடன் சென்று அவன் மனைவியை பார்த்து ஆசையுடன் அவள் அருகே செல்ல அவள் பின் வாங்கி நீங்கள் யார் என்று கேட்கிறாள்.மேலும் நீங்கள் வேறு யாரையோ நான் என்று நினைத்து கொண்டு பேசுவதாகும் சொல்கிறாள். இவர் யார் என்று எனக்கு தெரியாது என்று ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்கிறாள்.

இவன் குழப்பத்தின் உச்சிக்கு சென்று கத்தும் போது அவளுடைய கணவன் Dr.மார்டின் ஹாரிஸ் நான் தான் என இன்னொருவன் வந்து நிற்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இவன் வெளியேற்றபடுகிறான்.

இவன் பயணம் செய்த டாக்ஸியின் பெண் டிரைவர், முகம் பார்க்காமல் தொலைபேசி மற்றும் இணையத்தின் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு இவனை இந்த கான்பிரன்ஸ்க்கு அழைத்த ப்ரொபசர் என்று சிலரை சந்தித்தும் Dr.மார்டின்ஹாரிஸ் நான் தான் என்று நிருபிக்க இவன் எடுக்கும் அணைத்து முயற்சிகளும் தோல்வி அடைகிறது.

நடுவே இவனை கொல்லவும் ஒருவன் துரத்த.. நான் Dr. மார்டின் ஹாரிஸ் தானா? இல்லையா? என்று அவனுக்கே தெரியாத மனநிலையில் அவன் சந்திக்கும் போரட்டங்கள் உண்மையை அறிய அவன் எடுக்கும் முயற்சிகளும் தான் "UNKNOWN" திரைபடத்தின் பரபரப்பான கதை.

இது போன்று அவுட்லைன் உள்ள கதைகள் சில ஏற்கனவே வந்து இருந்தாலும் அதை ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் ஜெயித்து இருகிறார்கள். ரொம்ப நாள் ஆகி விட்டது இப்படி ஒரு பரபரப்பான கதைஅம்சம் உள்ள திரை படத்தை பார்த்து.

Dr. மார்டின் ஹாரிஸ் வேடம் ஏற்று இருக்கும் நடிகர் Liam Neeson கதாபாத்திரத்தின் ஆழம் உணர்ந்து வாழ்ந்து இருக்கிறார் . அவருக்கு அடையும் நம்பிக்கைகளையும்,ஏமாற்றங்களையும் படம் பார்க்கும் நம்மையும் உணர வைப்பது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வது தான் சரி .




அவர் மனைவியாக வரும் நடிகை january jones மற்றும் பெண் டாக்ஸி டிரைவர் ஆக வரும் நடிகை Diane Kruger ஆகியோர் அவரவர் பாத்திரம் உணர்ந்து செய்து இருகிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.. 1.30 மணி நேர என்டர்டயின்மென்ட்க்கு கேரன்ட்டி குடுக்கும் படம்.



1 comment:

கோபிநாத் said...

ரைட்டு...நோட் பண்ணிக்கிட்டேன்.

இறக்குற லிங்கு ஏதாச்சும் இருந்தா மெயிலுக்கு தட்டிவிடு ராசா ;)