Sunday, September 27, 2009

சினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..

சினிமா..

நான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..

கமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..

கமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .

மோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..

லக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..

அதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..
இது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..

எனக்கு வேறு பிடித்த விஷயம்
சீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..
ஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..
-----------------------------------------------------------------------------------------
சிந்தனை...

எந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..
அதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
இதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..
திரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "
பண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..
----------------------------------------------------------------------------------------------

சிகரட்டு..

சிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..
சிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..
சிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு "சுச்சு" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. "சுச்சு" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..
(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..? )

------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா? அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா?

அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்

Saturday, September 19, 2009

நாங்களும் போட்டோகிராப்பர் தான்..

ரொம்ப நாள் ஆச்சி.. பதிவு எழுதி..
ஏனோ இப்போ எல்லாம் அடுத்தவங்க எழுதினத படிகிறதுல இருக்குற ஆர்வம்.. எழுதுறதுல இருக்க மாட்டுது..
என்ன பண்றது.. ஒரு நாளைக்கு 10 பதிவு எழுதுறவங்கலே ரெண்டு நாள் எழுதாம விட்டா அவங்க ஹிட் லிஸ்ட் பாதிக்கு மேல காணாம போகுது ..
என்னை மாதிரி ஆள எல்லாம் நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..
இருந்தாலும் அதுக்காக உங்கள இம்சை பண்ணாம இருந்துட முடியுமா.. அப்படி அடுத்தவங்கள நிம்மதியா இருக்க விட்டா நான் தமிழன்னு சொல்லிகிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
அதனால இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் ...
விஜய், அஜீத் மாதிரி சக்செஸ் ஆகும்னு நெனச்சி நிறைய படம் குடுத்து பிளாப் ஆகுறத விட..
சிம்பு.. s.j சூர்யா மாதிரி.. ஒரு படம் நடிச்சாலும் கண்டிப்பா பிளாப்னு .. தெரிஞ்சி நடிக்கணும்...
அது மாதிரி ஒரு பதிவு போட்டாலும் இம்சை அதிகமா இருக்கனும்..
என்னோட முதல் இம்சை.. என்னை நானே பெரிய போட்டோகிராப்பர் னு நெனச்சிக்கிட்டு .. சமிபத்தில் விசாகபட்டினம் போனபோது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

ஆஹ்.. ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்.. கீழ உள்ள புகை படங்கள் எல்லாம் என் நண்பன் வினோத்கெளதம் பிரசன்ட் பண்ணுன டிஜிட்டல் கேம் ல எடுத்தது..... சைஸ் பெருசா இருக்குனு ரீசைஸ் பண்ணி போஸ்ட் பண்ணிஇருகேன் ..

(1) போரா குகைக்கு போற வழில ஒரு 8 கிலோ மீட்டர் உள்ள போனா வரும் நீர் விழ்ச்சி.. அங்க போக மெயின் ரோட்ல இருந்து ஜீப் வசதி உண்டு.. ஒரு ஆளுக்கு 70 ருபாய்.. 5 கிலோமீட்டர் வரைக்கும் ஜீப் பயணம்.. அப்பறம் 2 கிலோ மீட் நடராஜா சர்வீஸ் தான் மலை பாதைல.. வயசானவங்களுக்கு சிரமம்..



(2) அரக்கு வேளி ..
போகும் வழி எல்லாம் அழகு.. ஆனா அங்க புதுசா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியுல... ஒரு பார்க் ஒரு மியுஸிஎம் அவ்ளோ தான் .. அதான் பூக்களை மட்டும் எடுத்தேன்..




(3) ஹார்பர்.. லான்ச் பயணம் அருமையா இருக்கும்.. 40 முதல் 60 வரை கட்டணம்..கடலுக்கு உள்ள ஒரு 2 கிலோ மீட்டர் வரைக்கும் அழச்சிக்கிட்டு போவாங்க... கடலுக்குள்ள உள்ள இருந்து கரைய பாக்குறது ஒரு அழகுதான்..

(4) யரடா ஹில்ல்ஸ் அடிவரதுல இருக்குற பீச்.. யரடா பீச் மற்றும் கிரீன் வெளி பீச்னும் சொல்வாங்க பசங்களுக்கு ஏற்ற இடம்.. வீக் எண்டு அன்னிக்கு கூட்டம் வரும் வீக் எண்டு இல்லாம மற்ற நாள் போனா என்னை மாதிரி தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. மலை வழி முழுதும் அவ்ளோ அருமையான அழகு நிறைந்த இடம்..இங்க தான் டால்பின் நோஸ் பாயிண்ட் இருக்கு..





(5) டாபின் நோஸ் பாயிண்ட்


(6 ) யரடா மலை மீது இருந்து கடற்கரை அழகிய தோற்றம் ..(அழகா தான இருக்கு?)


அட இவ்ளோ தூரம் வந்து பார்த்திங்க .. எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க... விசாக ஸ்டீல் பிளானட் உள்ளே திருட்டு தனமாக எடுத்த படங்கள் மற்றும் போரா குகை படங்கள் அடுத்த பதிவில்..

Sunday, August 30, 2009

உணர்வு...

ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...

காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..

இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..

இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..

இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..



தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?









Tuesday, July 28, 2009

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட எனக்கு பிடித்த/பிடிக்காத பத்து..

ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...

என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )

1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..

2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..

3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..

4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...

5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..

6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..

7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.

8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...

9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..

10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..

பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?


10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...



டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...

Tuesday, July 21, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்து..

நான் ஜனிக்க போகும் நேரம்..
கடவுள் உனக்கு உலகில் என்ன வேண்டும்? என்றான்...
எனக்கென்று ஒரு உறவை தா என்றேன் கடவுளிடம்..

முதலில் தாயை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்தை பகிர முடியும் என்றான்..

பின்பு தந்தையை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்துடன் பண்பை உணர முடியும் என்றான்..

அதன்பின் நல்ல ஆசிரியரை தந்தான்..
ஏன் என்றேன்?
பண்புடன் பகுத்தறிவு பெற முடியும் என்றான்..

காதலியாய் ஒரு பெண்ணை தந்தான்..
இவளும் ஏன் என்றேன்?
உலகை புரிந்துகொள்ள முடியும் என்றான்..

நான் என்னை நானாக உணர ஒரு உறவை தா என்றேன்..

என்னை பார்த்து ஒரு புன்னகை செய்த கடவுள்..
காத்திரு ஜூலை 22 வரை என்றான்..
காத்திருந்தேன் ..
காலை கதிரவனாய் உன் ஜனனம்..

ஆம்.. என்னை நான் நானாக உணர கடவுள்
உன் நட்பை தந்தான்..


இன்று ( 22 . 07 . 2009 )
என்
நண்பன் வினோத்கெளதம் க்கு பிறந்தநாள்...

அவன் விரும்பிய அனைத்தும் பெற்று
நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்



எனது உயிர் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

wish you a very happy birthday da machan..










Friday, July 10, 2009

அழிந்து போன கரகம்..

நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி சிகரங்களை தொட்ட பல கலைகள் இன்று காணமல் போவதும் அழிக்கபடுவதும் சர்வ சாதரணமான விஷயமாக ஆகி வருகிறது...

மருத்துவம், இசை, நாட்டியம், கல்வி இப்படி எந்த கலையிலும் சிறந்து விளங்கிய நமது நாட்டில் நம்மவர்களால் அந்த கலைகள் அழிக்கப்படுவது வேதனை.


அதிலும் நாட்டுப்புற கலையான கரகாட்டம் இன்று அடிபட்டு நசுக்கபட்டத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை மல்லாக்கபடுத்து யோசித்தது உண்டு.. ஆனால் நேற்றுவரை எனக்கு அதற்கான விடை தெரியவில்லை...





இன்று
காலை செய்தித்தாளை பார்க்கும் போதுதான் என்னுடைய இத்தனை நாள் கேள்விகளுக்கும், குழபத்திற்கும்.. பதிலும் தெளிவும் கிடைத்தது...
இனி அந்த ஆண்டவனே வந்தாலும் கரகாட்ட கலையை காப்பாற்ற முடியாது... கரகாட்டம் என்பதை இனி கல்வி பாடத்தில் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினர் கண்டு கொள்வார்கள்.









சரி
அப்படி என்ன பதிலை கண்டு பிடிசிட்ட ..? உனக்கு இப்போ என்ன தெளிவு வந்துடுச்சி..?

அப்படின்னு நீங்க கேப்பிங்கன்னு எனக்கு தெரியும்...

சில விஷயங்கள சொல்லி புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள அடிச்சி கூட புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள் கண்ணால பார்த்து அனுபவத்துல உணர்ந்தா தான் புரியும்...

பாருங்க...

அட என்னை இல்லங்க... கீழ பாருங்க...

அட..படுத்தாதிங்க ..

மௌஸ் ஸ்க்ரொல் பண்ணி கீழ பாருங்க...

1



2



3




4




5


6



7



8



9



10



அய்... அஸ்கு புஸ்கு.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவனா ?

10



9



8



7



6



5



4



3



2



1 ....



ரெடி ...



ஸ்டடி ...



ஓப்பன்..





இப்போ சொல்லுங்க இவங்க இப்படி ஆடினால்.. கரகாட்டம்..
நசுங்குமா நசுங்காதா ?

Saturday, June 20, 2009

வறுமையின் விளிம்பு..




இன்று
எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..
வலியும் வேதனையும் மட்டுமே வாழ்க்கையாக தேர்ந்தெடுத்த அவளுக்கு
கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..

வயிற்று பசி தீர்ப்பவரை விழுந்து யாசிக்கும் இந்த உலகம்
அடுத்தவரின் உடல் பசி போக்கும் அவளுக்கு வைத்த பெயர் வேசி...


நான்கு சுவருக்குள் இவர்களின் சுயரூபத்தை கண்டதாலோ என்னவோ
இந்த உலகத்தின் பேச்சுகளை அவள் என்றுமே லட்சியம் செய்தது இல்லை..

இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி போக்க.....