Tuesday, March 31, 2009

நான் இந்தியன் அல்ல......

இந்தியா எனது தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்... இந்த வாக்கியங்களை சொல்லும் போது நாவை வெட்டி கொள்ளலாம் போல தோன்றும்.. நான் எதற்காக இந்த நாட்டிற்காக உழைக்க வேண்டும் ? இந்த நாட்டிற்காக எனது சந்தோசத்தை எதற்கு தியாகம் செய்ய வேண்டும் ? இந்த நாடு எனக்கு என்ன செய்து இருக்கிறது? (இந்தியன் என்ற கேவலமான அடையாளத்தை எனக்கு தந்ததை தவிர..)
நான் படித்த படிப்பிற்கு ஏற்ற ஒரு நல்ல வேலை தர வக்கில்லாத இந்த நாட்டிற்காக நான் எனது சுகங்களை விட்டு தர வேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்..?
இந்தியர்கள் யாவரும் என் உடன் பிறந்தோர்...
இதை கேட்கும் போது எது வழிய சிரிக்க தோன்றுகிறது தெரியுமா? இவர்கள் யார் என் மீது உரிமை கொண்டாட ? நான் எதற்காக இவர்களிடம் சகோதர பாசத்துடன் பழக வேண்டும்? நான் கஷ்ட படும் போது எனக்கு உதவி செய்யாதவர்கள்... என் படிப்பை தொடர நான் வழிதேடிய போது எனக்கு வழி காட்டதவர்கள் ... உங்கள் இந்திய மக்கள்... இவர்களுக்காக என் சந்தோசத்தை விட்டு தர முடியாது... ஏன் விட்டு தர வேண்டும்?
இந்திய அரசியல்...
அரசியல் ஒரு சாக்கடை.. இது பொதுவாக சொல்வது... என்னை பொறுத்தவரை இந்திய அரசியல் பல மொழி இன மக்களின் கழிவு கிடங்கு...
இந்திய அரசியல் தலைவர்கள்...
என்னை பொறுத்தவரை இவர்கள் என் மைருக்கு சமானம்... நாட்டு மக்களை பற்றி யோசிக்க வக்கில்லாமல் தன் குடும்ப நலன் பற்றி அக்கறை படும் சுயநலவாதிகள்... தங்கள் சுயலாபத்திற்காக திவிரவாதத்தை நம்... ச்சே.. உங்கள் நாட்டில் வளர செய்தவர்கள்...
இந்திய மக்கள்...
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வெளியே வந்து தங்களின் சுய மரியாதயை நூறுக்கும் இருநூறுக்கும் விலை பேசி விற்று செல்லும் விபச்சாரிகள்...
எனது படிப்பிற்கு வெளி நாட்டில் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் போது நான் ஏன் இந்த @@@@ மகன்களிடம் ஆயரதிற்கும் இரண்டுஆயரதிற்கும் கை கட்டி வேலை செய்ய வேண்டும்?
ஒரு இந்தியனாக என்னை நினைக்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது,,,
இந்தியன் என்ற அடையாளத்தை நான் என்னுள் இருந்து அழித்து விட்டேன்... நான் வெளி நாட்டு குடிஉரிமை பெற்று விட்டேன்... இனி நான் இந்தியன் அல்ல ... ஆம்...
நான் இந்தியன் அல்ல....
இப்படிக்கு
xxxx
நாள் :31.03.1998
இதற்கு கருத்து வெளியட விரும்புவோர் எனது அடுத்த பதிவை படித்து விட்டு வெளிடலாம் . இல்லை நான் இப்போ தான் கட்டைய கைல எடுப்பேன் என்று சொல்பவர்கள்.. ஆரம்பியுங்கள்..
குறிப்பு : நீ நாட்டு பற்று இல்லாதவன்... உன் கேவலமான புத்திய உன் பதிப்பு காட்டுது.. மற்றவர்களை கவர இந்த கேவலமான பதிவு... இது போன்ற விமர்சனங்களை எதிர் பார்க்கபடுகின்றன...
அட ஏன் இப்படி வயசுக்கு வந்த பிள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்தி வரிங்க?
அடிக்கணும்னு முடிவு பண்ணிடிங்கள்ள ..? ம்ம்ம்... ஸ்டார்ட் பண்ணுங்க...

15 comments:

வால்பையன் said...

வெளியிட்டாச்சா?

வால்பையன் said...

இது என்ன போன எலக்சனுக்கு எழுதியதா?

வால்பையன் said...

டென்ஷன் ஆவாதிங்க!

kishore said...

ஆச்சு ஆச்சு..
எந்த எலக்சனுக்கு எழுதுனாலும் நம்ப நாட்டுக்கு சூட் ஆகும் போல தோனுது..
டென்சன்... நானா... ச்சே.. ச்சே... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே...(ஸ்ஸ்ஸ்ஸ்... எப்பா எவ்ளோ நாளைக்கு தான் நடிக்கிறது,...)

வினோத் கெளதம் said...

K..I waiting for the 2nd Part.
But I totally Disagreed with tis 1.
I think u little bit knw abt my view in this issue.
Iam always Proud to Be a Indian.
Jai Hind.

Prabhu said...

என்னவோ பொடி வச்சிடுக்காப்புல தெரியுதே? அடுத்த பதிவ பாத்து தான், முடிவு சொல்லுவோம்!

kishore said...

i can feel your view about this issue vinoth.. but U know about ME very well more than ME... i hope so..

kishore said...

OK PAPPU..

Joe said...

குடியுரிமையை விட்டு விட்டு, வேறு எந்த நாட்டுக்கு சென்றீர்கள் என்று சொல்லவில்லையே?

மைருக்கு --> மயிருக்கு?

Perumal said...

ஆஹா...இங்க என்னமோ நடக்க போகுது..பார்ப்போம்..

நாட்டு பற்று என்பது ஒரு complex subject. இன பற்று, நிற பற்று, மொழி வெறி எல்லாத்தையும் தப்பு என்னும் சமுதாயம் தேச பற்றை மட்டும் போற்றுகிறது. நாட்டை பற்றி கவலை படும் மக்கள் உலகத்தை பற்றி கவலை படுவது இல்லை ஏனோ...

பாலா said...

ஏப்ரல் ஃபூல்.. பண்ண பாக்கறீங்களா... கடைசில டேட்ல என்னவோ இருக்கற மாதிரி பார்த்தாலே தெரியுதே...!!!

ஹா.. ஹா.. ஹா...! :-) :-)

இருந்தாலும் கட்டையை கைல வச்சிக்கறேன். ஃபூல் பண்ணினாலும் அடிதான்..!

biskothupayal said...

http://biskothupayal.blogspot.com/

பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.

உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

kishore said...

நன்றி ஜோ ... சிறு தவறு நடந்து விட்டது... ஆமா இப்போ இந்த மயிரு அவசியமா?

kishore said...

வாங்க பாலா அண்ணா... நாளைக்கு சொல்றேன்... எதுக்கும் கட்டைய கீழ போட்டுடாதிங்க ...

kishore said...

வாங்க பிஸ்கோத்து... ஜோதில ஐகியமாகுங்க