Wednesday, July 14, 2010

ஷ்ஷ்ஷ் .... இது ரகசியம் - 1

வணக்கம் ... எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ஏன் வெறின்னு கூட சொல்லலாம்.. ஒரு தொடர்கதைய எழுதிபுடனும்ணு.. நல்ல படிங்க.. அது தொடர்கதை தான் தொடர்பதிவு இல்ல.. நீங்க பாட்டுக்கு அ, ஆ.. எ ,பி, சி ,டி .. பிடிச்சது, கடிச்சதுன்னு எழுத கூப்பிடாதிங்க .. ஆமா அப்படியே என்னைய மதிச்சி நீங்க கூபிட்டுடாலும் ..

சரி விஷயத்துக்கு வருவோம்.. தொடர் எழுதுறதுன்னு முடிவு ஆகி போச்சி.. அது நெடுந்தொடரா ..குறுந்தொடரா.. இல்ல மிடுந்தொடரா.. ( அதாங்க பாதில நிறுத்துறது... எப்புடி ? நாங்களும் செம்மொழி மாநாட்டுக்கு லீவ் போட்டுட்டு பிக்னிக் போன பய பக்கிங்க தான்.. ) அப்படின்னு யோசனை வந்தப்ப
சரி கழுத எழுதுறது தான் எழுதுறோம்.. பல பய புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி இல்லைனாலும் சில "சில்வண்டு " புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி எழுதி வைப்போம்னு இந்த மிடுந்தொடர ஆரம்பிக்கிறேன்..

ஒரு நிமிஷங்க நம்ம கனகாவோட அப்பா பூஜைய நடத்தி முடிச்சதும் கதைய ஆரம்பிக்கலாம்..

நடிகர் ஷண்முகசுந்தரம்: ஆத்தா..மகமாயி.. ஆயரம் கண்ணு உடைய கண்ணாத்தா எங்கள காக்க வந்த காளிஆத்தா.. நம்ம புள்ள கிஷோர் புதுசா ஒரு மிடுந்தொடர ஆரம்பிக்க போகுது.. புதுசா கதை எழுதுறவன பழைய எழுதாளனுங்க மிதக்கிறது ச்சே.. மதிக்கிறது தான ஆத்தா மரியாத? அதனால நீ தான் கிஷோர்க்கு பக்க பலமா நீ இருந்து அந்த புள்ளைய காரி துப்புரவங்க , செருப்பால அடிக்கிறவங்க, எதிர் பதிவு போடுறவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி..

ட்ரைலர்....

இந்த தொடர் கதைய படிக்கச் முன்வந்த அணைத்து தைரியசாலிங்களுகும் என்னோட அசால்டான வணக்கங்கள்..

நீங்கள் தொடர்ந்து படிக்கச் போகும் இந்த கதையின் அத்தியாயங்கள் வழக்கமான காதல் ,மோதல் ,பிரிவு ,உறவு ,உணர்சிகள் அடங்கிய வழக்கமான பாணி கதைகள் அல்ல.

பொதுவாக பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, குடும்பங்கள் - உறவுகள் இடையில் எவ்ளவோ கருத்துக்கள் அதில் வேறுபாடுகள், மோதல்கள் ஆனால் இவை அனைத்தும் கலந்தாலோசித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது வேறு ஒரு மூன்றாம் நபரால் இயல்பாக மிக சுலபமாக தீர்த்து கொள்ள கூடிய விஷயங்கள்..

ஆனால் இது இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் நம்பிக்கை போராட்டம் பற்றிய தொடர்..

இரு நண்பர்கள் இடையே உண்மையும் நம்பிக்கையும் எவ்வளவு தூரம் பயணிகிறதோ தூரம் அதே அளவு தூரத்தை அவர்கள் காக்கும் ரகசியமும் பயணிக்கும்.

அப்படி கல்யாணம் ஆகாத இரு இளைஞ்சர்கள் இடைய உருவான நட்பில் உள்ள "நம்பிக்கை" "ரகசியங்களை " அலசி ஆராயும் தொடர்.



அத்தியாயம் -1



கிருஷ் ... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நடுத்தர வர்கத்து வாலிபன். அழகானவன் அறிவானவன் ஒழுக்கமானவன் குறைவாய் பேசுபவன் என்று அவனை பற்றி விவரிப்பதற்கு இரண்டு மூன்று அத்தியாங்கள் தேவைபடும். ஆதலால் .. சுருக்கமாக.. அவன் கடந்து செல்லும் போது ஒரு முறையாவது அவன் பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அப்படி ஏங்கதவர்கள் திருமணம் ஆகி இருப்பார்கள் அல்லது பார்வை இழந்தவர்களாய் இருப்பார்கள்.

விமல்... எப்பொழுதும் பேசிக்கொண்டு இருப்பவன்.. வேலை, அறிவு, ம்ம்... ஒழுக்கம் இவை அனைத்திலும் கிருஷை போலவே இருப்பவன் .. அழகில் பிரம்மனின் சலுகையை கொஞ்சம் அதிகமாக பெற்று கொண்டவன்.

பள்ளி காலம் முதலே இவர்களை போலவே இவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..

அதிகாலை 4.30 மணி..

செல் போன் தொடர்ந்து அழைக்க.. தூக்கத்தில் இருந்து கண்ணை விழிக்க விரும்பாத கிருஷ்.. கண்ணை மூடிய படி செல்போன் -ஐ எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றான் ..

"டேய் மச்சான் நான்தாண்டா.. "- விமல்

"சொல்லுடா என்ன இவ்ளோ காலைல போன்?" -கிருஷ்

"டேய்.. அது.. அது.."

"என்னடா? சீக்கிரம் சொல்லி தொல தூக்கமா வருது.."

"டேய் எப்படிடா சொல்லுவேன்?"

" ஐயோ காலைல படுத்தாதடா சொல்லு"

"டேய் எனக்கு போன்ல எப்படி சொல்றதுன்னு தெரியுல.. நீ எழுந்து குளிச்சிட்டு ரெடியா இரு .. நான் வீட்டுக்கு வரேன்.. நாம இன்னைக்கு திருச்சி போறோம்.. "

"டேய் என்னடா திடிர்னு.. இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும?" - சலிப்புடன் கிருஷ் கூற..

"டேய் விஷயம் தெரிஞ்சா இப்படி சாதரணமா கேக்கமாட்ட?" என்றான் விமல்

"அப்போ என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன்.."

"அது.. அது.. வந்து.. மேகா .."

"என்னது ... மேகாவா .. ?

படுக்கையை விட்டு எழுந்த கிருஷ் முகத்தில் வியர்வைகள் முத்தாய் சிதறி கிடக்க அவன் கண்களின் பயம் பரவி கிடந்தது..


தொடரும்..

19 comments:

பாலா said...

உங்களுக்கு புண்ணியமா போவுது. யாருனா.. இந்த ‘ஸ்வேதா’-ங்கற பேருக்கு ரிட்டயர்மெண்ட் வாங்கிக் கொடுங்கப்பா!!

பாலா said...

கிருஷ் - விமல்,

பேச்சிலர்ஸ்

இதெல்லாம் சரியாதான் இருக்கு.

பாலா said...

ஸோ.. இப்ப விமல் எதுனா பிரச்சனை பண்ணினா..., விமலோட தகிடுதத்தமெல்லாம் தொடர்கதையில் வந்துடும்னு சொல்லுறீங்களா??


இதுக்கு எதிர்வினையை விமல் எழுதுவாரா??? ரொம்ப இண்ட்ரஸ்டிங்.

kishore said...

@ஹாலி பாலி

உங்களின் விருபத்திற்கு ஏற்ப "ஸ்வேதா" என்ற பெயர் "மேகா" வாக மாற்றபட்டுவிட்டது.. ஆனாலும் அண்ணாத்த இந்த பேர் மாற்றத்துக்கு பின்னாடி வருத்தபட போறீங்க.. ஹாலு..

kishore said...

@ஹாலி பாலி

ஹலோ.. ஹலோ.. கிருஷ் , விமல் எல்லாம் ஜஸ்ட் கேரக்டர்ஸ் யா.. வொய் யு கொழப்பிபையிங் ?

kishore said...

@ஹாலி பாலி

இது ஒரு கற்பனை கதை அவ்வளவே .. நண்பர்கள் இடையில் உள்ள ரகசியங்களை அலசி ஆராயும் தொடர்..
இதில் விமலின் அந்தரங்கம் மட்டும் அல்ல கிருஷ்.. மேகா .. இன்னும் இதில் வர கூடிய அணைத்து கதாபாத்திரங்களின் அந்தரங்ககளும் விவரிக்கபடும்..
ஆனால் மிக முக்கியமாக விமல் மற்றும் கிருஷின் வாழ்கை ரகசியங்கள் மீது அதிக கவனம் செலுத்த கூடிய கதையாக இருக்கும்..
விமல் என்று ஒருவரே கற்பனை எனும்பொழுது அவரின் எதிர் பதிவை எப்படி எதிர் பார்க்க முடியும்? .. சிலர் வேண்டுமானால் தங்களை விமலாக கற்பனை செய்து கொண்டு இதற்கு எதிர் பதிவு எழுத வாய்ப்பு உண்டு... அப்படி எழுதபடும் பதிவுகள் அனைத்தும் .. சுய விளம்பரத்திற்காக எழுதபடும் பதிவாக மட்டுமே எடுத்து கொள்ளுங்கள்..

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
உங்களுக்கு புண்ணியமா போவுது. யாருனா.. இந்த ‘ஸ்வேதா’-ங்கற பேருக்கு ரிட்டயர்மெண்ட் வாங்கிக் கொடுங்கப்பா!//

தல, ஸ்வாதின்னு மாத்திடலாமா?.:))

--
கிஷோர், இது தொடர் பதிவு இல்லையா?? அவ்வ்வ்..:)

நடத்துங்க.

பாலா said...

//சிலர் வேண்டுமானால் தங்களை விமலாக கற்பனை செய்து கொண்டு இதற்கு எதிர் பதிவு எழுத வாய்ப்பு உண்டு... அப்படி எழுதபடும் பதிவுகள் அனைத்தும் .. சுய விளம்பரத்திற்காக எழுதபடும் பதிவாக மட்டுமே எடுத்து கொள்ளுங்கள்//

இன்னாயா.. நடக்குது இங்க? ஒன்னியும் புர்ல??

லேபிள்ல புனைவு, சொற்சித்திரம் -ன்னு எதுனா போட்டு எங்க டவுட்டை தீர்த்து வைங்கப்பா.

பாலா said...

//தல, ஸ்வாதின்னு மாத்திடலாமா?//

ரிப்பீட்டு.

சீமான்கனி said...

இந்த தொடரை படிக்கிறவங்களை நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி...

ஆரம்பமே அசத்தல் தொடரட்டும் கிஷோர்..வாழ்த்துகள்...

kishore said...

@ ஷங்கர்
நன்றி ஷங்கர்... :)

kishore said...

@ ஹாலி பாலி

//இன்னாயா.. நடக்குது இங்க? ஒன்னியும் புர்ல??//

தோடா .. நாங்க மட்டும் என்ன புரிஞ்சா எழுதுறோம்?
ஆமா ஸ்வாதி யாரு? கிஷோர் போன் -அ போடுடா அமெரிக்காவுக்கு..

kishore said...

@seemangani
நன்றி நண்பா... இருந்தாலும் அந்த வெக்காளிஅம்மன் தான் உங்கள எல்லாம் காப்பத்தனும் .. :)

வினோத் கெளதம் said...

தொடர்கதை வேறயா..கடவுளே..யாராச்சும் இந்த காதல் கதைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுங்கப்ப..

மேல இருக்குற Profile Picலாம் ஒரு மார்கமா இருக்கே...என்னவோ போ..

வினோத் கெளதம் said...

''ஹாலி பாலி'' Comments எல்லாம் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம இருக்கே ..நல்லா இருந்த சரி தான்..:)

பாலா said...

//மேல இருக்குற Profile Picலாம் ஒரு மார்கமா இருக்கே...என்னவோ போ.//

அதானே...!! ஜே. கே. ரித்திஷின் இடம் கோலிவுட்டில் இன்னும் காலியாதான் இருக்காம்.

நீங்க என்ன நினைக்கறீங்க விமல்.. ஸாரி.. வினோத்?? ;)

kishore said...

@வினோத் கெளதம்

டேய் கதைய மட்டும் படிச்சமா போனமானு இரு..

ஹாலி பாலி என்னைக்கு புரியுற மாதிரி பேசி இருக்காரு ?

kishore said...

@ ஹாலி பாலி

பாலா ஏற்கனவே நான் தான் உங்களுக்கு போன் பண்ணி விமல்ன்றது வினோத் தான்னு சொன்னதா சொல்லிகிட்டு இருக்கான்.
நீங்க வேற.. அவன இன்னும் கிளப்பிவிடாதிங்க.. அப்புறம் அவன சமாளிக்கிறது பெரிய வேலையா இருக்கும்..
விமலுக்கும் வினோத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல..

priya said...

romba interestinga iruku unga story... naan romba avalouda ethir pakuren...... sikkarama next episode..............

Pages (71)1234 Next