நரேனுக்கு போன் பேசி வைத்ததும் இந்த நொடியே வீட்டில் இருக்க வேண்டும் போல் தோன்றியது.. காரணம் வர்ஷிதா..
பெயரை நினைக்கும் போதே மனசுக்குள் பட்டம்பூசிகள் பறந்தன.
என்ன செய்ய? இன்னும் முழுசா ஐந்து மணி நேரம் இருக்கு.. புதுச்சேரி போய் சேர்வதற்கு.. நேற்று இரவு எட்டு மணிக்கு விசாகபட்டினத்தில் இந்த ரயில் பயணம் ஆரம்பம் ஆனது.. தப்பு பண்ணிட்டமோ..? பேசாம சென்னை வரை பிளைட்ல வந்து இருக்கலாமோ? இதுக்கு போய் எவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ன்னு பேரு வச்சான்? ச்சே.. அடுத்த தடவ இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது.. இல்ல.. இல்ல.. இனிமே அவளை பிரிஞ்சி வரவே கூடாது.
எண்ணங்கள் பலவாறு சிந்தனை ஓட்டத்தில் பறந்து செல்ல.. அவன் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் புதுச்சேரி செல்லும் ரயில் அதற்கு உரிய நேரத்தில் உரிய நிறுத்தங்களில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
பெட்டியினுள் ஏசி காற்று மிதமாக பரவி கிடக்க தலையணை எடுத்து முதுகிற்கு கொடுத்த படி ஜன்னலோரம் சாய்ந்து கண்ணாடி வழியே கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடி வர்ஷிதாவின் நினைவுகளில் மூழ்கினான்.
வர்ஷிதா..
அழகு தேவதை.. தேவதை? இந்த வார்த்தை வர்ணனை கூட அவளின் அழகில் தோற்று விடும் என்பதே நிஜம்..
அவளின் காற்றில் சிரித்தாடும் கருங்கூந்தல் ஆகட்டும்..
கோபம் வரும் சமயங்களில் இடுப்பில் கை வைத்து உதட்டை சுழித்து பெரிய கண்கள் கொண்டு முறைப்பது ஆகட்டும் ..
ரோஜா இதழ் .. இல்லை அதை விட நிறமுள்ள இதழ் திறந்து வெண்ணிற பற்கள் தெரிய சிரிப்பது அகடும்..
அப்படி சிரிக்கும் பொழுது அவள் இரு கன்னங்களில் விழும் குழிகள் ஆகட்டும்..
எதை சொல்ல.? இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளின் அந்த கன்னக்குழியில் விழுந்தவன் தான் இது வரை எழ முடியவில்லை.. எழவும் விரும்பவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவளை பிரிந்து ஒரு வார பயணம்.ஒவ்வொரு நாட்களும் ஒரு யுத்த களத்தை சந்திப்பது போன்று.. ச்சே.. திரும்பவும் வாழ் நாளில் இப்படி ஒரு வேதனையை அனுபவிக்க நான் தயாராக இல்லை என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.
ரயில் இபோழுது விழுப்புரத்தை வந்தடைந்திருந்தது.. இன்னும் 40 நிமிஷம் பின் வீட்ற்கு ஒரு 10 நிமிட பயணம்.. முள் படுக்கை என்றால் என்னவென்று உணர்ந்த நொடிபோழுதுகள் அவை.
என்னதான் தினமும் தொலை பேசியில் பேசினாலும் அவளும் ஏங்கிதான் போய் இருப்பாள்..பேசும் பொழுது அவள் குரலிலே தெரிந்ததே.. வீட்டிற்கு போனதும் அவளை இறுக கட்டி விட்டுப்போன ஒரு வாரத்திற்கும் சேர்த்து முத்த மழை பொழிய வேண்டும்..
ஒரு வழியாக பிற்பகல் இரண்டு மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையம் வந்தடைந்து, அரக்க பரக்க ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தான்..
வந்து திறப்பதற்குள் மீண்டும் ஒரு முறை அடித்தான்.. அதுவும் பொறுக்க முடியாமல் வர்ஷிதா என்று கத்தினான்.
சில கணங்களில் கதவை திறந்து வெளிபட்டாள் அவள்.. வர்ஷிதா.. உண்மையாகவே தேவதை தான்..
"வர்ஷிகுட்டி.............." என்று கத்தியவாறு கதவை கூட மூடாமல் அவளை அள்ளி எடுத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தான்..
அம்மா... அம்மா.. இங்க வா... வந்து பாரு.. அப்பா...... மழலை மொழியில் அம்மாவை அழைத்தவள் அவன் கன்னங்களில் மிருதுவாய் ஒரு முத்தம் பதித்தாள்.
7 comments:
me the first .........குழந்தைகளின் முத்தத்துக்கு ஈடு இணையே இல்லை.முடிந்தால் அவர்களையும் உங்கக் கூட வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் பெற முடியாத சுகம், இனிய ுமுத்தங்கள்.உங்க கண் முன்னே உங்க குழந்தை வளருவாள்.dont miss the chance dont leave them.
@ நிலாமதி..
நன்றி நிலாமதி. உண்மை தான்.. எனக்கும் குழந்தைகள் என்றால் உயிர்.. அதிலும் பெண் குழந்தைகள்.. ம்ம்.. நீங்கள் சொல்வதை நிச்சயம் செய்வேன் திருமணம் ஆன பின்பு.. :)
அண்ணே.. ஒரு நாலஞ்சு பாராவுக்கு முன்னாடியே கண்டு புடிச்சிட்டேன். :)
@ ஹாலி பாலி
நீங்க ஒரு நல்ல அப்பான்னு நிருபிச்சிடிங்க அங்கிள்... :)
hw is anjali?
குழந்தையா ...நான் கூட இன்னமோ ஏதோனு நினைச்சேன்..
நல்ல கதை தான்..
இம்புட்டு லொள்ளு ஆவாதுய்யா..!
அடப்பாருய்யா.... இவனுக்குள்ள இவ்ளோ திறமை ஒளிஞ்சுட்டு இருக்கா??
முடிவை சில வரிகளுக்கு முன் யூகிக்க முடிந்தாலும் நடை அருமை...
ஏன் அடிக்கடி எழுதுறதில்ல???
Post a Comment