Tuesday, September 28, 2010

வழி மேல் விழி வைத்து ..

நீண்ட நாட்களாக பதிவுலகம் (?) பக்கம் வரும் வாய்புகள் குறைவாகவே இருக்கிறது. தவிர பதிவுகளை படிக்கவும் தோன்றுவது இல்லை .

நான் பல தடவ செயல்படுத்தனும்னு நினைக்கிற ஒரு விஷயத்த என்னோட நண்பர்கள் "ஜஸ்ட் லைக் தட்" ன்னு செஞ்சுடுறாங்க. ஆமா என்னோட பதிவுலக நண்பர்கள் பலரும் இப்போ எழுதுறத நிறுத்திடாங்க. ஒருவேளை நானெல்லாம் எழுதுறன்னு அப்படி ஒரு முடிவு எடுத்தாங்களோ ?



கல்லூரி காலம் முடிந்து நண்பர்களை பிரிந்து இருக்கும் நாட்களில் ஒரு வெற்றிடம் மனதில் தோன்றுமே அதை மீண்டும் இப்போ உணர்கிறேன். ஒரு பதிவு எழுதினாலே அது எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து கூடி கும்மி அடித்து செல்வதும். ஒருவரை ஒருவர் ஜாலியாக வம்பிழுப்பதும் உண்மையாகவே கல்லூரி கால கட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்றவர்கள்.

ஹாலிவுட் பாலா, கலையரசன், பப்பு, சர்க்கரை சுரேஷ், கண்ணா, வினோத் கெளதம் என்று ஒன்று கூடி கலாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றும் பசுமையாக இன்றும் மனதில்..... இவர்களில் வினோத்கெளதம் மட்டுமே எனக்கு முன்பே தெரிந்த நண்பன் . மற்ற அனைவரும் பதிவுலகம் மூலமாக கிடைத்த அழகிய நட்பு மலர்கள்.

பழகிய ஒரு சில நாட்களில் "டா" போட்டு பேசும் அளவிற்கு பாசத்துடன் கலந்த நட்பை வழங்கியவர்கள். இன்று "சில " "பல " சொந்த காரணங்களினால் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.

பப்பு படிக்கச் சென்று விட்டான் எப்போவாவது சாட் -ல் கை அசைப்பதோடு சரி.

கலை கல்யாணத்திற்கு அப்புறம் ஆளை காணவில்லை. தொலைபேசியில் எப்போவாது பேசுவதோடு சரி.

திடீர் திடீர் என்று அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி தரும் சர்க்கரை சுரேஷ் இந்த பதிவுலகத்தின் மேல் கோபத்தில் சென்றவர் தான் இதுவரை பதிவுலகம் பக்கம் வர வில்லை.

ஹாலி பாலி "ப்ளாக்"யே அழித்து விட்டார். மற்றவர்களிடம் "டா" போட்டு பேசும் பொழுது இவரை மட்டும் "சார்" , "அண்ணா" என்று அழைக்க சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க கிஷோர் என்று சகோதர பாசத்துடன் பழகியவர். சந்தேகம் எதுவாக இருந்தாலும் எந்த சப்ஜெக்ட் பத்தி இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம் இவரிடம். கொஞ்சமும் எரிச்சல்படாமல் இவரின் பணி சுமைக்கு நடுவிலும் நமக்கான நேரத்தை ஒதுக்கி தருபவர்.

வினோத் கல்யாண வேலையாக இருப்பதால் அவனை இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.

கண்ணா மட்டும் தான் இப்பொழு எழுதி கொண்டு இருக்கிறார்.. அதுவும் முன்பு நிறைய மாதிரி எழுதுவது இல்லை அவர் எழுதி ஒரு மாதம் ஆகிறது.

இப்படி அனைவரும் ஒவ்வொரு திசை பறவைகளாய்...
ஆனால் நிச்சயம் மீண்டும் இந்த பறவைகள் அனைத்தும் இந்த பதிவுலக சரணாலயத்தில் ஒன்று கூடும் என்று அந்த வசந்த காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும்..
- கிஷோர்

7 comments:

எஸ்.கே said...

இந்த பதிவில் ஒரு இனம் புரியா வேதனை தெரியுது சார்! நிச்சயம் நண்பர்கள் திரும்ப எழுத வருவார்கள் என நம்புவோம்!

சீமான்கனி said...

ஆமாம் கிஷோர் நானும் நண்பர்களை தேடுகிறேன்...முக்கியமா சர்க்கரை சுரேஷ் அவர் பதிவுகள் அவ்வளவு அருமையா இருக்கும்....ம்ம்ம்ம்...என்னத்த சொல்ல ...

வினோத் கெளதம் said...

//வினோத் கல்யாண வேலையாக இருப்பதால் அவனை இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.//

ஆறு மாசம்ன்னு நீயே முடிவு பண்ணிட்டா எப்படி ..

வினோத் கெளதம் said...

இன்னும் ஆறு மாசம் எழுதாம இருப்பன்னு சந்தோஷப்படுரியா..உன்னை என்னைக்கு சந்தோஷமா இருக்க விட்டேன்..இன்னிக்கே கெடுக்குறேன்..சந்தோஷத்தை சொல்றேன்..

வினோத் கெளதம் said...

//சர்க்கரை சுரேஷ் அவர் பதிவுகள் அவ்வளவு அருமையா இருக்கும்//

வழிமொழிகிறேன் ..

கோபிநாத் said...

;))) ஆனாலும் ஓவருய்யா

kishore said...

@ எஸ் கே

நிச்சயம் நம்புவோம்

@சீமான்கனி
அவெரெல்லாம் போனது நிச்சயம் பெரிய இழப்பு தான்

@ வினோத்கெளதம்

//சர்க்கரை சுரேஷ் அவர் பதிவுகள் அவ்வளவு அருமையா இருக்கும்//
//வழிமொழிகிறேன் ..//


மொழி.. மொழி.. டேய் ஊருக்கு கிளம்பி வர சொன்னா இன்னும் என்ன பண்ற?

@ கோபிநாத்

ஆஹா.. தெரிஞ்சிபோச்சா..? தெரிஞ்சி போச்சா..?