Monday, March 7, 2011

"நடுநிசி நரிகள்" - இவன் அதில் ஒருவன் .
வணக்கம் நண்பர்களே..

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. (அடிங்க .. வந்துட்டாண்டான்னு சொல்றது கேக்குது)

ரொம்ப நாள் கழிச்சி ப்ளாக் பக்கம் வந்தா ஒன்னும் புதுசா இல்ல.. அதே.... அவன் என்னை மூக்குல குத்திட்டான்... இவன் என்னை பின்னாடி கடிசிட்டான் ... தைரியம் இருந்த எங்க அண்ணன் மூஞ்சில துப்பி பாரு... டேய் எவன்டா என் தலைவன் தலைல தக்காளிய வச்சி தேய்ச்சது? நீ அந்த சாதிகாரன் என்பதால் தான என்னைய திட்டுன.. எங்க சாதிகாரன விட்டு உனக்கு எதிர் பதிவு போட சொல்றேன் பாருடா.... அதே.. அதே.. அதே.... சாமி முடியல..

தோழமையோட ஒருத்தர ஒருத்தர் கலாய்கிறதும்.. அதை பெருந்தன்மையோடு ஏற்று கொண்டு நட்பு பாராட்டுவதும்.. மனமொத்த புரிதல்களும் ,முகமறியா நட்புகளும் இப்பொழுது இணையத்தில் காணவில்லை பட்டியலில் சேர்ந்து விட்டது போலும்.

என்னத்த சொல்றது.. பெட்ரோல் விலை ஏறி போச்சுன்னு மண்ணெண்ணெய் ஊத்துனேன். மண்ணெண்ணெய் விலை ஏறி போச்சுன்னு குருடாயில் ஊத்துனேன் அப்படிங்குற கதையா.. ஜி -டாக் ல சண்ட போட முடியலுனு ஆர்குட் வந்தோம் அப்பறம் ஆர்குட்ல சண்ட போட முடியலன்னு ப்லோக்க்கு வந்தோம் இப்போ லேட்டஸ்ட் BUZZ வரைக்கும் வந்தாச்சு.. அதுலயும் இவங்க சண்ட நின்ன பாடு இல்ல.


இந்த ஹிட் லிஸ்ட் ஹிட் லிஸ்ட்னு ஒன்னு இருக்குங்க அதை கண்டு பிடிச்சவன் கண்ணுல கம்பிய காச்சி குத்தனும் . அந்த ஹிட் லிஸ்ட நக்குறதுக்கு சில பேரு படுற பாடு.

கொஞ்ச நாளா நடுநிசி நாய்கள் என்கிற ஒரு உலக படத்த பத்திதான் காரசாரமான விவாதம் ஆனால் உப்புக்கு தேறாத விவாதங்கள்.

இவர்களின் விவாதங்களை கொஞ்சம் நேரம் ஒதுக்கி முழுசா படிச்சா... வடிவேலு சொல்ற மாதிரி கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிப்பீங்க சார், அப்படி ஒரு காமெடி .

ஒருத்தர் சொல்றாரு கௌதம் மேனன் தன்னோட அரிப்ப தீர்த்துக்க இப்படி ஒரு படம் எடுத்து இருக்காருன்னு ..
இல்ல நாட்டுல நடக்காததையா அவரு சொல்லிடாருனு இன்னொருத்தர் சொல்றாரு.


இந்த மாதிரி படம் பார்த்து தான் பசங்க கேட்டு போறங்கனு ஒரு தரப்பு..
படம் பார்த்து தான் கெட்டு போறாங்கனா இந்நேரம் நாடு நாறி இருக்கும் இன்னொரு தரப்பு.

வன்புணர்ச்சி செய்யவும் தகாத உறவுகளில் ஈடுபடவும் தூண்டுவதாக ஒரு குற்றசாட்டு ஒருபுறம்.
இணையத்தில் கிடைக்கும் தகாத உறவுகள் மற்றும் வன்புணர்ச்சி காட்சிகள் பார்த்து படாதவர்களா இந்த மாதிரியான படங்களை பார்த்து தூண்ட படுவார்கள் என்று குற்றசாட்டை மறுப்பது மறுபுறம் .

இந்த மாதிரி படம் தான் ஒருத்தனை வன்புணர்ச்சி மற்றும் கொலை செய்ய தூண்டியது என்று பத்திரிகை ஆதரத்துடன் ஒரு வாதம்.
அப்படி என்றால் வெளி நாடுகளில் இப்படி ஏன் நடப்பது இல்லை என்று எதிர் வாதம் ( சில இடங்களில் நடந்ததுண்டு.)

நடுவே திட்டமிட்ட குற்றங்களுக்கும் உணர்ச்சி விளிம்பில் நடக்கும் குற்றங்களுக்கும் உள்ள வேறு பாடு குறித்து ஒரு அலசல்.( நிச்சயம் வேறுபாடு உண்டு என்று கூறிய பதிவரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.)

இப்படி செல்லும் இந்த காமெடி விவாதத்தில் நடுவில் சிலர் புகுந்து செம நக்கல் விடுவதும் அதையும் இவர்கள் சீரியஸ் விஷயமாக எடுத்துக்கொண்டு பேசுவதும் ... ஹையோ ஹையோ.. முடியல போங்க.

நானும் அந்த படத்துக்கு போனேன்ங்க..உலக அதிசியமா எங்க ஊர்ல டிக்கெட் விலை கம்மி பண்ணி வித்தாங்க...
அப்பறம் சரியான நேரத்துக்கு படம் போடாங்க.. ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன் இண்டர்வெல்ல கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பாப்கார்ன் சாப்பிட்டேன் ( நண்பன் செலவுல) சரியா பத்து நிமிஷத்துல திரும்பவும் படம் ஆரம்பிச்சிடாங்க. அப்பறம் என்ன வாங்குன பாப்கார்ன்ன கொறிசிகிட்டே மீதி படமும் பார்த்துட்டு வந்துட்டேன்.


என்னது படத்த பத்தி என்னோட கருத்தா ?

அட போங்க பாஸ்..

என்னால எதிர் பதிவு எல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது.

வர்ர்ர்டா......

குறிப்பு: இப்போ எல்லாம் நடுநிசில தன் இணையத்துக்கு வரமுடியுது அதை நினைசிகிட்டே நம்ம கேரக்டர்ரையும் சேர்த்து யோசிச்சா தலைப்பு ரெடி ஆகிடுச்சி .(இது தலைப்பை பற்றி கேட்பவர்களுக்கு மட்டும்)

12 comments:

pappu said...

நாந்தான் பர்ஸ்ட்1.(வேற வழி) என்ன யாரும் இல்லாத கடையில் டீ ஆத்தின ஃபீல் இருக்கா?

எப்படி இருக்கீங்க? உங்க கல்யாணம் எப்போ?

kishore said...

ஹை .. நான் தான் செகண்ட் .. ஆமா பப்பு.. பாலைவனதுல பஞ்சு மிட்டாய் வித்த மாதிரி இருக்கு.. 6 மாசம் ப்ளாக் பக்கம் வரலான வோட்டர் லிஸ்ட்ல இருந்து பேர எடுத்துடுவாங்க போல இருக்கு.(இதுவும் நல்லா தான் இருக்கு) நான் நல்லா இருக்கேன் பப்பு. நீ எப்படி இருக்க?பெங்களூர் வாழ்கை எப்படி இருக்கு? சீக்கிரம் கல்யாணத்த பத்தி சொல்றேன். :)

வினோத் கெளதம் said...

Sema comedya irutuchu..ungakkita antha flow innum irukku kishore..

aamam unga kalyanam eppa..

கோபிநாத் said...

கலக்குறிங்க கிஷோர் ;)

ஆமா உங்க கல்யாணம் எப்போ !? ;))

pappu said...

அவரு கல்யாணம் விடுங்க. வினோத் போஸ்ட் மேரேஜ் லைஃப் எப்படி? ப்ளாக் எழுதுங்கப்பு!

சீமான்கனி said...

அட போ(வா)ங்க பாஸ்..
எப்படி இருக்கீங்க கிஷோர்..

kishore said...

@ வினோத் கெளதம்
அப்படியா வினோத்... சந்தோசம்.. உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி..

கல்யாணம்... நடக்கும் போது சொல்றேன்...

kishore said...

@கோபிநாத்

நன்றி கோபிநாத்..

கல்யாணம்... நடக்கும் போது சொல்றேன்...

kishore said...

@ பப்பு

இபோவது என் கல்யாணத பத்தி கேக்க வேணாம்னு தோனுச்சே..

kishore said...

@ சீமங்கனி

நல்ல இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க

kishore said...

@பப்பு, வினோத் கெளதம் , கோபிநாத்..

//ஆமா உங்க கல்யாணம் எப்போ !? ;))//

சொல்றேன்,, கண்டிப்பா உங்களுக்கு சொல்லாமலா,, தம்பி அதான் சொல்றேன்னு சொன்னேன்ல ,, டேய் தம்பி இப்படி எல்லாம் அழ கூடாது அண்ணனுக்கு கல்யாணம் நடக்கும் போது உன் கிட்ட சொல்லாம செய்வானா ?

டேய் இப்போ என்னாங்குற ... நான் என்ன இப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா சொல்றேன்..
நானே யாரும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலன்னு கடுப்புல இருக்கேன்.. வந்து நொய்.. நொய்ன்னு.. டார்ச்சர் பண்றீங்க ராஸ்கல்ஸ்...

pappu said...

பெத்தவங்கள ஏன் கஷ்டப் படுத்துறீங்க? நீங்களே, பொண்ண பாத்துக்குறது.