இவனுக்கு ஒரு பிரச்சனை... தீர்க்க முடிஞ்சவங்க தீர்த்து வைங்க...

ரிஷிபாலா ...
பிரச்சனையே சதிஷ்க்கு இப்போ இவ தான்...
இவ அப்படி என்ன தான் பண்ணிட்டா ?
இவன லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டாளா ?
இவன தான் கலயணம் பண்ணிப்பேன்னு அடம்பிடிகிறாளா ?
எதுவும் இல்ல...
சரி இவ யாரு?
இவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.?
இப்படி கேட்டா ரெண்டு பெரும் சொல்ற ஒரே பதில்...
அப்படி என்னத்த சொல்ல போறாங்க? எல்லோரும் சொல்லுற அதே பொய் தான்... நாங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ்...
சதிஷ்.. ரிஷிபாலா.. சந்திப்பே ஒரு இனிமையான நினைவுகள் தான்...
சதிஷ் தனது மனக்காயங்களை ஆற்ற இணையத்தை நாடி இருந்த சமயம்... வழக்கம் போல நெட்டில் ஒரு பெண்ணிடம் கடலை போட... அவளும் வெகுளியாக பேச...
அவளின் பேச்சு... அவன் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைய...அவர்களின் பேச்சு போன் நம்பர், போட்டோ பரிமாற்றம் என்று உருமாறி ... நேரில் சந்திப்பு நடத்துவது வரை போனது...
அவனின் மனக்காயங்களை முழுதாய் அறிந்தவள் என்பதாலோ என்னவோ நட்பு வட்டத்தில் மட்டுமே இருந்தது அவர்களின் உறவு...
சதிஷ் சில சமயங்களில் வரம்பு மீறி பேசினாலும் உடன் அது தவறு என்று தெரிந்து திருத்திகொள்வான் ... அவற்றை எல்லாம் சகித்து அவனுடன் பழகி வருகிறாள் ரிஷிபாலா...
இந்த நட்பு மீண்டும் ஒரு அழியா ரணத்திற்கான காரணமாக அமைந்துவிடுமோ என்று பயந்து சில சமயங்களில் அவளுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து இருக்கிறான்... சில நாட்களுக்கு பின் அவள் அவனிடம் இது பற்றி கேட்க அவன் தனது பயத்தை அவளிடம் சொல்ல... சிரித்தபடி.. அவள் சொல்லியது ...
"என்னை பற்றி நீ புரிந்துகொண்டது இவ்ளோ தானா சதிஷ்...?"
இதுக்கு அப்புறம் எப்படி அவளின் நட்பை துண்டித்து கொள்ள முடியும்?
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன...
அவனும் அவளிடம் பேசுறான்,சிரிக்கிறான் ,சண்டை போடுறான், சமாதானம் ஆகுறான்...
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது அவனுக்கு...
ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது என்ற கீழ்தரமான எண்ணம் கொண்டவன் அல்ல அவன்...
ஆனால் அவனுக்கு அவளிடம் மட்டும் இது சாத்தியபடவில்லை
இது நிச்சயம் எதையும் எதிர்பார்க்காத பரிசுத்தமான நட்பு இல்லை...
அப்போ காதலா? நிச்சயம் அதுவும் இல்லை...
நட்பு ,காதல் போன்ற வார்த்தைகளை கண்டுபிடித்தவர்கள்.. இரண்டிற்கும் இடையில் உள்ள உணர்வை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது யார் குற்றம்?
(தயவு செய்து காமம் என்று சொல்லி கேவலபடுதாதிங்க )
என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தனுக்கு மனைவியா ஆகபோறவ... அவகிட்ட இப்படி முறை தவறி பேசுறது தப்புன்னு அடிக்கடி தோனுது இவனுக்கு... அதே சமயம் நான் அவளுக்கு நண்பன் என்ற சொல்லிக்கொண்டு கொண்டு அவனே சமாதானம் ஆகிப்பான்...
அவங்க ரெண்டு பேரு காதலிகிறாங்களா ?
அவங்க ரெண்டு பெரும் நண்பர்கள் தானா?
இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல தேவை இல்ல... ரெண்டு வருஷமா அவங்களுகே தெரியாதது ரெண்டு நிமிஷம் படிச்சிட்டு உங்களால சொல்லமுடியாதுன்னு அவனுக்கு நல்லவே தெரியும்...
அவன் கேக்குற கேள்வி...
அவளுடன் இப்படி தொடர்வது தவறு என்று அவனுக்கு அடிக்கடி தோனுது... இதை காலம் முழுதும் வெறும் நட்பு என்று சொல்லி அவனை அவனே ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை.. அதே போல் அவளின் முகம் பார்த்து இனி நாம் தொடர வேண்டாம் என்று சொல்லவும் தைரியம் இல்லை ...
அவளுடன் இந்த மாதிரியான நட்பும் அல்லாத காதலும் அல்லாத உறவை தொடரலாமா வேண்டாமா?
தொடரலாம் என்றால் காரணத்தை விளக்கவும்...
வேண்டாம் என்றால் அவளிடம் எப்படி இதை அவள் மனம் நோகாமல் தெரிவிப்பது என்று சொல்லுங்கள்.
(குறிப்பு: யாரு என்ன சொன்னாலும் அவன் என்ன நினைகிறானோ அதை தான் செய்வான்... இது அவனிடம் நன்கு பழகிய நண்பர்களுக்கு தெரியும் )














