விசா வின் ஆலோசனையில்
முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை
பலாவும்,
பிரபாகரும்,
ஹாலிவுட் பாலாவும் ,
வினோத்கௌதமும் தொடர.. தானே போய் உக்கார்ந்த கதையாய் இப்பொழுது நான்...
( முழுசா படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிசோடு எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.)
இனி ..
-----------------------------------------------------------------------------
விமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் ..
ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய
லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய
முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை
சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.
அதை தொடர்ந்து கேப்டனின் குரல்..
"dear
passengers, we are returning to the chennai airport due to some techinical fault.
dont worry still flight is in control.
sorry for the inconvenience."
இது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.
அடுத்த
பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.
அவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை
அழுத்தினான் ..
சில நொடிகளில் மறுமுனை நேரடியாக
"நீ இன்னும் பிளைட் ஏறலியா ?" என்று பதற்றமாக கேட்டது .
"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி..
ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்" - ராஜேஷ்
"ஓ! அவன் என்ன பண்றான்?"
"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை "- ராஜேஷ்
" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல?
அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு ..
அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்."
"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா? இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ? "- ராஜேஷ்
"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல
ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா ? நீ சொன்னத மட்டும் செய்..
கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு"
"சரி" என்றான் ராஜேஷ்
மறுமுனை கட் ஆனது.
--------------------------------------------------------------------------
"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா ?"- ஸ்வாதி
"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க?" - ஆவுடையப்பன்
"சார்.
நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்.."
"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க"
"சரி சார்.." என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .
------------------------------------------------------------------------
ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..
ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..
தலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..
ராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.
எதுவும் புரியவில்லை..
என்ன இது இவன் பேசுறான்? போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி ? மருந்து வேலை செய்யலியா?
மெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ்
அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
--------------------------------------------------------------------------
அதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..
"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு
இருந்தாள் ஸ்வாதி ..
-------------------------------------------------------------------------
இவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி? என்று யோசித்தபடி..
"ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு? " அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட்டான்.
அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..
அ.. ர்.. ஜூ .. ன்..
அ.. ர் .. ஜூன்..
அர்.. ஜூன்..
அர்ஜுன்..
(தொடரும்)..தொடரபோவது நண்பர் சுபதமிழினியன்.. வாழ்த்துக்கள் :)
------------------------------------------------------------------------------
டொய்ங் : முடிந்த வரை 10 பாகதிற்க்குள் முடிக்க பாருங்க.. அப்போ தான் விறுவிறுப்பா இருக்கும் அடுத்தது தொடங்கவும் வசதியா இருக்கும் . இல்லனா டெலி சீரியல் மாதிரி ஆகிட போது..
யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]
விதிகள் :
01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.