நேற்று மதியம் ஒரு முக்கிய வேலையாக புதுச்சேரி செல்ல வேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு கொடுத்து விட்டு கிளம்பினேன் .
பைக்கை பஸ்ஸ்டாண்டில் விட்டுவிட்டு கடலூர் செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சில் ஏறி அமர்ந்து மொபைலில் பாட்டு கேட்க தொடங்கினேன்.
பொதுவாகவே சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்தில் பயணம் செய்வதை விரும்புவேன். முன்னாடி போ , பின்னாடி போ , இன்னும் நகர்ந்து உக்காரு போன்ற தொல்லைகளும், போகும் ஒரு மணி நேரத்திற்கு அதிக படியான சவுண்டில் ஓடும் திரைப்படங்களும் இல்லாமல் ஏறுபவர்களை மட்டும் ஏற்றி கொண்டு செல்லும்.. ஆதலால் நிம்மதியாக பயணத்தை அனுபவிக்க அரசு பேருந்தில் பயணம் செய்வேன்.
பஸ் கிளம்பி 5 நிமிடத்தில் ஒரு சிறுமியும் (?) விடலை பையனும் ஏறினார்கள். கண்டிப்பாக கடலூரில் இருந்து வந்து சிதம்பரத்தில் பொழுதை கழித்து (!!!!!???) விட்டு பள்ளி முடியும் நேரம் கடலூர் செல்கிறார்கள் . அந்த பெண் பள்ளி சீருடையில் இருந்தாள். உடலில் உள்ள இளமை தோற்றத்தையும் மீறி முகத்தில் ஒரு குழந்தை தனம் தெரிந்தது. பையன் முகத்தில் பக்கா பொறுக்கி கலை.. பத்தாதற்கு வாயில் புகையிலை வேறு அழுத்தி இருந்தான்.
மதியவேளை என்பதால் பஸ்சில் கூட்டம் இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேர் மட்டுமே இருந்தோம். ஏறுன சனியனுங்க என் கண் எதிர்லையா வந்து உக்காரணும்?
டிக்கெட் எடுத்த சில நிமிடங்களில் ஆரம்பித்தது இவனின் பொறுக்கிதனம். அவளின் உடல் முழுவதும் அவனின் கைகள் விளையாட ஆரம்பித்தது. அதை விட கொடுமை உச்சகட்டமாக அவன் அவளின் கையை எடுத்து தன் "மடியில்" வைத்து கொண்டது தான். அவள் வெட்கத்தாலும் கூச்சதாலும் சில சமயம் அவன் கைகளை தட்டி விட்ட போதும் அந்த உணர்வுகளை ரசித்த படி அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்தாள்.
எழுந்து போய் ஓங்கி அறையலாமா என்று கோபம் வந்தது. அதை பார்த்தால் கோபம் அதிகம் ஆகும் என்று முகத்தை திருப்பி கொண்டேன்..ஆனாலும் மனசு எங்க கேக்குது? திரும்ப திரும்ப பார்க்க வைத்தது .
ஒரு மதிய வேளையில் பல பேர் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு ஆடவன் தன்னிடம் எல்லை மீறி செய்யும் செயலை அனுமதிக்க அவளுக்கு இந்த வயதில் எப்படி தைரியம் வந்தது? இங்கயே இப்படி செய்பவன்.. தனிமையில் என்னவெல்லாம் செய்து இருப்பான்? ஊடகங்களும் திரைப்படங்களும் தான் காரணம் என்று பொதுவாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
வயதிற்கு வந்த பெண் பெற்றோரையும் பள்ளியையும் ஏமாற்றி விட்டு வருவது அவ்ளோ ஈஸியான விஷயமா? இதற்கு முழுமுதற் காரணங்கள் அவளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தான்.
ஒரு வழியாக யாரை பற்றியும் எந்தவித கவலையும் இன்றி இவர்களின் "ஓரல் செக்ஸ்" கடலூர் வரை தொடர்ந்தது. அவர்கள் ஜன்னலோரம் அமர்ந்து இருந்தலால் அவளின் புத்தக பை என் இருக்கையின் அருகில் இருந்தது. பையின் வெளியே நீட்டி கொண்டு இருந்த நோட்டில் இருந்த லேபிளில் உள்ள பெயரை படித்தேன்.. கடலூரில் உள்ள கண்டிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலமான பள்ளி. அவளின் பெயரும் அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள் என்பதும் இருந்தது. வழக்கம் போல் ஒரு சிறந்த இந்திய குடிமகனாக எவனாவது எப்படியாவது போகட்டும் என்று ஊர் வந்ததும் இறங்கி விட்டேன்.
இருந்தாலும் நேற்றில் இருந்து அந்த பெண்ணின் குழந்தை முகமும்.. வயதும்.. தப்பு பண்ணி விட்டமோ? ஓங்கி அறைந்து கேட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்பொழுது நேரடியாக கேக்க முடியாவிட்டாலும் அவளின் பள்ளிக்கு தகவல் தெரிவித்து அவள் பெற்றோர் மூலம் கண்டிக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவ்வபொழுது எழுகிறது. அதே சமயம் இதனால் எழும் பிரச்சனையில் அவள் வயது எந்த முடிவையும் எடுக்க தயங்காது என்று நினைக்கும் பொழுது, சும்மா இருக்க சங்க எதுக்கு எடுத்து ஊதுற ? பஸ்ல போனோமா சீன பார்த்தோமான்னு இருடா உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை? என்றும் நினைக்க தோன்றுகிறது. இப்போ நான் என்ன செய்ய?
21 comments:
இப்போ கரெக்ட்ஆ நீங்க சொன்ன டயலாக்கு ஏத்த
மாதிரி கே.டி.வி.யில் தம்பி படம் போடுறான்....
அதை வேணும்னா பார்க்கலாம்....
@ ஜெட்லி
அதை தான் செய்ய போறேன்.. நன்றி :)
//பையன் முகத்தில் பக்கா பொறுக்கி கலை.//
நம்ம ஜூனியர்!!
--
இப்ப ஏன் எதைப் பார்த்தாலும் கொதிக்கறீங்க கிஷோர்? ரெண்டு பேரும் மைனர்-ன்னா ஒன்னும் பண்ண முடியாது. பையன் மேஜர்ன்னா... ஜெயில்ல போடலாம்.
பொண்ணு மேஜர்ன்னா, பையன் கொடுத்து வச்சவன்னு நினைச்சிட்டு போகணும்.
வேறு எதுவும் நாம் செய்ய முடியாது!! Towelhead -ன்னு ஒரு படம் இருக்கு.
18+ல் எழுதலாமான்னு ஒரு 4-5 மாசமா யோசிச்சிட்டே இருக்கேன். முடிஞ்சா பாருங்க. இதெல்லாம் நிதர்சனம்.
//இப்போ நான் என்ன செய்ய?//
பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என்று உரக்க சொல்லுங்க!
இனிமேல் மறக்காம கருப்பு கண்ணாடி எடுத்துட்டு போங்க கிஷோர்
அந்தப் பெண்ணை மட்டுமே குறை சொல்ல முடியாது கிஷோர்.. சினிமாவும் ஒரு காரணம்.
ஸ்கூல் படிக்கும் பெண்கள் “களவாணி”களைக் காதலிப்பது போல சினிமா எடுப்பதும் ஒரு காரணம்.
Make a Complaint against them in School...its my choice...
அல்லோ... நீங்க நெட்ல வர்ற கிளிப்ங்ஸ்லாம் பார்ப்பதில்லையா....?
இங்கயே இப்பிடின்னா தனியா இருக்கும் போது எப்பிடின்னு கேட்டிங்கல்லா? அதெல்லாம் அங்கதான் இருக்கும்
:))
@ ஹாலி பாலி
கொதிக்கலங்க பாலா.. அந்த பொண்ணோட இன்னொசென்ட் பேஸ் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிடுச்சி.. அவங்கள விடுங்க.. towelhead விமர்சனம் எப்போ? :)....
இன்னோசண்ட் ஃபேஷ் பார்த்து ஏமாந்திங்களா? அல்லது அப்படி முகம் இருப்பவர்கள் எல்லாம் இதை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
முகத்தில் என்ன இன்னோசண்ட் வேண்டிகிடக்கு, அது ஒரு பொண்ணு, அவளுக்கு பிடிச்சதை செய்யுற, அதை எப்போ செய்யனும்னு சொல்லி தரணும்
@ வால் பையன்
//பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என்று உரக்க சொல்லுங்க!//
நீங்க சொல்றது வாஸ்தவம் தான..
எங்க சொல்றது.. சும்மாவே இப்போ இருக்குற ஸ்கூல் வாத்தியாருங்க பொண்ணுங்க கிட்ட பண்ற சேட்டை தாங்கல.. தினமும் பேப்பர் பார்த்தா இவனுங்க நியூஸ்-அ காரி துப்பவே நேரம் சரியாய் இருக்கு. இதுல "அதை" பத்தி "அது"ங்களயே சொல்லி குடுக்க சொன்னா.. கடவுளே..
@ seemangani..
உங்க ஐடியா ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆமா நீங்க சொன்னது நாம எங்க பாக்குறோம்னு மத்தவங்களுக்கு தெரியாம இருக்க தான?
@ முகிலன்
நீங்கள் சொல்வது சரி தான.. ஆனால் அதை விட பெற்றோர்களின் கண்காணிப்பு என்பது முக்கியம் அல்லவா? அதை ஏன் பலர் செய்வது இல்லை?
@VSNL
yeah.. thanks for your suggestion :)
@கண்ணா
ஆஹா நெட்ல பிட்டு படம் பார்கிறவரா நீங்க நீ?
@ வால்ஸ்..
இன்னொசென்ட் பேஸ் பார்த்து ஏமாறலங்க .. அவளின் வயதிற்கு இது தேவைஇல்லாதது என்ற ஒரு ஆதங்கம்..
//அதை எப்போ செய்யனும்னு சொல்லி தரணும்//
யாரு சொல்லி தரனும்? நிச்சயமாக பெற்றோர் தான முதலில் அதை பற்றி சொல்லி தரனும்.. அதற்கு அப்புறம் தான் பள்ளிகளில் செக்ஸ் கல்வி எல்லாம்..
தயவு செய்து அந்த பெண்ணின் பள்ளிக்கு தெரியப்படுத்தவும்..
(உனக்கு கிடைக்காதது வேற எவனுக்கும் கிடைக்க கூடாது)
//"இப்போ நான் என்ன செய்ய?"
//
Yaara antha ponnayaaa? :))
@வினோத் கெளதம்
//(உனக்கு கிடைக்காதது வேற எவனுக்கும் கிடைக்க கூடாது)//
சும்மாவா சொன்னேன் நீ என் நண்பன்னு
@ pradeep
அந்த பொண்ண என்னத்த செய்யுறது.. :)
வருகைக்கு நன்றி..
உங்கள் பதிவுகளை பார்த்தேன்.. ஒவ்ஒன்றும் சாட்டை அடி..
எப்படி இத்தனை நாள் உங்க பதிவுகளை விட்டு வைத்தேன் என்று தெரியவில்லை .. மன்னிக்கவும்.. என்னால் உங்கள் பதிவுகள் பின்னோட்டம் இட முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை. சில மாதங்களாக இந்த பிரச்சனை இருக்கிறது.. தனியாக பக்கம் திறந்து பின்னூட்டம் இடும் வசதி இருந்தால் என்னுடைய ப்ளாக் இல் இருந்து பின்னூட்டம் இட முடிகிறது.
பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!
என்ன சொல்வது எல்லாத்தையும் நிங்களே சொல்லிடிங்க , ஊடகங்கள் காரனம் இல்லைன்னு சொல்றதை நான் ஏற்றுகொள்ள மேடன் , மிகப்பெரிய துண்டுதல் அதுவே
Post a Comment