வணக்கம் ...
எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ஏன் வெறின்னு கூட சொல்லலாம்.. ஒரு தொடர்கதைய எழுதிபுடனும்ணு.. நல்ல படிங்க.. அது தொடர்கதை தான் தொடர்பதிவு இல்ல.. நீங்க பாட்டுக்கு அ, ஆ.. எ ,பி, சி ,டி .. பிடிச்சது, கடிச்சதுன்னு எழுத கூப்பிடாதிங்க .. ஆமா அப்படியே என்னைய மதிச்சி நீங்க கூபிட்டுடாலும் ..
சரி விஷயத்துக்கு வருவோம்.. தொடர் எழுதுறதுன்னு முடிவு ஆகி போச்சி.. அது நெடுந்தொடரா ..குறுந்தொடரா.. இல்ல மிடுந்தொடரா.. ( அதாங்க பாதில நிறுத்துறது... எப்புடி ? நாங்களும் செம்மொழி மாநாட்டுக்கு லீவ் போட்டுட்டு பிக்னிக் போன பய பக்கிங்க தான்.. ) அப்படின்னு யோசனை வந்தப்ப
சரி கழுத எழுதுறது தான் எழுதுறோம்.. பல பய புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி இல்லைனாலும் சில "
சில்வண்டு " புள்ளைங்களுக்கு
புரியுற மாதிரி எழுதி வைப்போம்னு இந்த மிடுந்தொடர ஆரம்பிக்கிறேன்..
ஒரு நிமிஷங்க நம்ம கனகாவோட அப்பா பூஜைய நடத்தி முடிச்சதும் கதைய ஆரம்பிக்கலாம்..
நடிகர் ஷண்முகசுந்தரம்: ஆத்தா..மகமாயி.. ஆயரம் கண்ணு உடைய கண்ணாத்தா எங்கள காக்க வந்த காளிஆத்தா.. நம்ம புள்ள கிஷோர் புதுசா ஒரு மிடுந்தொடர ஆரம்பிக்க போகுது..
புதுசா கதை எழுதுறவன பழைய எழுதாளனுங்க மிதக்கிறது ச்சே.. மதிக்கிறது
தான ஆத்தா மரியாத? அதனால நீ தான் கிஷோர்க்கு பக்க பலமா நீ இருந்து அந்த புள்ளைய காரி துப்புரவங்க , செருப்பால அடிக்கிறவங்க, எதிர் பதிவு போடுறவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி..
ட்ரைலர்.... இந்த தொடர் கதைய படிக்கச் முன்வந்த அணைத்து தைரியசாலிங்களுகும் என்னோட அசால்டான வணக்கங்கள்.. நீங்கள் தொடர்ந்து படிக்கச் போகும் இந்த கதையின் அத்தியாயங்கள் வழக்கமான காதல் ,மோதல் ,பிரிவு ,உறவு ,உணர்சிகள் அடங்கிய வழக்கமான பாணி கதைகள் அல்ல.பொதுவாக பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, குடும்பங்கள் - உறவுகள் இடையில் எவ்ளவோ கருத்துக்கள் அதில் வேறுபாடுகள், மோதல்கள் ஆனால் இவை அனைத்தும் கலந்தாலோசித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது வேறு ஒரு மூன்றாம் நபரால் இயல்பாக மிக சுலபமாக தீர்த்து கொள்ள கூடிய விஷயங்கள்.. ஆனால் இது இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் நம்பிக்கை போராட்டம் பற்றிய தொடர்.. இரு நண்பர்கள் இடையே உண்மையும் நம்பிக்கையும் எவ்வளவு தூரம் பயணிகிறதோ தூரம் அதே அளவு தூரத்தை அவர்கள் காக்கும் ரகசியமும் பயணிக்கும்.அப்படி கல்யாணம் ஆகாத இரு இளைஞ்சர்கள் இடைய உருவான நட்பில் உள்ள "நம்பிக்கை" "ரகசியங்களை " அலசி ஆராயும் தொடர்.அத்தியாயம் -1கிருஷ் ... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நடுத்தர வர்கத்து வாலிபன். அழகானவன் அறிவானவன் ஒழுக்கமானவன் குறைவாய் பேசுபவன் என்று அவனை பற்றி விவரிப்பதற்கு இரண்டு மூன்று அத்தியாங்கள் தேவைபடும். ஆதலால் .. சுருக்கமாக.. அவன் கடந்து செல்லும் போது ஒரு முறையாவது அவன் பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அப்படி ஏங்கதவர்கள் திருமணம் ஆகி இருப்பார்கள் அல்லது பார்வை இழந்தவர்களாய் இருப்பார்கள்.
விமல்... எப்பொழுதும் பேசிக்கொண்டு இருப்பவன்.. வேலை, அறிவு, ம்ம்... ஒழுக்கம் இவை அனைத்திலும் கிருஷை போலவே இருப்பவன் .. அழகில் பிரம்மனின் சலுகையை கொஞ்சம் அதிகமாக பெற்று கொண்டவன்.
பள்ளி காலம் முதலே இவர்களை போலவே இவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..
அதிகாலை 4.30 மணி..
செல் போன் தொடர்ந்து அழைக்க.. தூக்கத்தில் இருந்து கண்ணை விழிக்க விரும்பாத கிருஷ்.. கண்ணை மூடிய படி செல்போன் -ஐ எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றான் ..
"டேய் மச்சான் நான்தாண்டா.. "- விமல்
"சொல்லுடா என்ன இவ்ளோ காலைல போன்?" -கிருஷ்
"டேய்.. அது.. அது.."
"என்னடா? சீக்கிரம் சொல்லி தொல தூக்கமா வருது.."
"டேய் எப்படிடா சொல்லுவேன்?"
" ஐயோ காலைல படுத்தாதடா சொல்லு"
"டேய் எனக்கு போன்ல எப்படி சொல்றதுன்னு தெரியுல.. நீ எழுந்து குளிச்சிட்டு ரெடியா இரு .. நான் வீட்டுக்கு வரேன்.. நாம இன்னைக்கு திருச்சி போறோம்.. "
"டேய் என்னடா திடிர்னு.. இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும?" - சலிப்புடன் கிருஷ் கூற..
"டேய் விஷயம் தெரிஞ்சா இப்படி சாதரணமா கேக்கமாட்ட?"
என்றான் விமல்
"அப்போ என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன்.."
"அது.. அது.. வந்து.. மேகா .."
"என்னது ... மேகாவா .. ?
படுக்கையை விட்டு எழுந்த கிருஷ் முகத்தில் வியர்வைகள் முத்தாய் சிதறி கிடக்க அவன் கண்களின் பயம் பரவி கிடந்தது..
தொடரும்..